Headlines

அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் நிறைவுற்ற அபிவிருத்திப் பணிகள் மாணவர்கள் பாவனைக்கு கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கொழும்பு, அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் பெயர் பலகை ஆகியவற்றை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு வெள்ளிகிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-    

Read More

பதினெட்டு வருடம் பட்டை தீட்டப்பட்ட கூரிய ஆயுதமே ரிஷாட் பதியுதீன்! — ஷிபான் BM

பெருந்தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு தலைவன் வருவானா? என ஏங்கிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சகல இன மக்களாலும் பட்டை தீட்டப்பட்டு கூராக்கப்பட்ட ஆயுதமே அமைச்சர் றிசாட் பதியுதீன்! இரண்டாயிரத்துக்குப் பின்னரான இந்த பதினெட்டு வருடகாலத்தில் கழுத்தறுப்புக்கள் , காய்வெட்டுக்கள் அத்தனையும் கடந்து இன்று இந்த சமூகத்தின் ஒட்டு மொத்த பாரத்தையும் சுமக்கத்தயாரான, சுமக்கின்ற நிலையில் உள்ள ஆலவிருட்சமே றிசாட் பதியுதீன்! வில்பத்து விவகாரம், பொது பலசேனா விவகாரம், நீதிமன்ற விவகாரம்,சக்தி…

Read More

செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு! 

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும்  முதியோர் தின நிகழ்வு நேற்று (20) செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய ரிப்கான் பதியுதீன் அவர்கள், கல்வி, கலை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களையும், முதியோர்களை கௌரவித்து அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தார். பிரதேச செயலாளர்…

Read More

முசலி வள நிலையம் நடாத்திய மரநடுகை நிகழ்வில் தவிசாளர் சுபியான் பங்கேற்பு!

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் தலைமையில், முசலி வள நிலையத்தின் ஏற்பாட்டில் [MRC],  பொற்கேணி பிரதான வீதி அருகில், மர நடுகைத் திட்டம் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் மற்றும் சிலாவத்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி, கடற்படை அதிகாரிகள் உட்பட  இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர். இத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைப்பு செய்தவர்களுக்கும், உதவி நல்கியவர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். (ஐ)…

Read More

தவிசாளர் முஜாஹிர் தலைமையில் காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல்!!! 

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில், 39 காற்றாலை (மின்பவர்) மூலமான மின் உற்பத்தி  தொடர்பான கலந்துரையாடல் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டதுடன், வடமாகாண நகர அபிவிருத்திக்கு பொறுப்பனான அதிகாரி மைக்கல் மற்றும் மன்னார் பிரதேசபையின் தொழில்நுட்ப அதிகாரியும் இந்த சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில் அமைக்கப்பட இருக்கும் மின்பவர் (காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பாக) RDS, WRDS மற்றும் பள்ளிவாசல்கள், கேவில்கள் ஆகியவற்றின் தலைவர்,…

Read More

தர்கா நகர் சாதனையாளரை கெளரவித்த அமைச்சர் ரிஷாட்!

மதீனா முனவ்வராவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிராஅத் போட்டியில், சர்வதேச மட்டத்தில் 03 ஆம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த, தர்கா நகரை சேர்ந்த அல் ஹாஃபிழ் அல் காரி அல் ஆலிம் அஹமத் ஹலீமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டி கௌரவித்தார்.  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று வியாழக் கிழமை (18) இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை தொகுதி அமைப்பாளரும்,…

Read More

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) “உலக பட்டினி ஒழிப்பு” தொடக்க முயற்சிகளுக்கு தனது அமைச்சின் கீழான, அதனுடன் தொடர்புபட்ட அத்தனை நிறுவனங்களும் பூரண பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி பிரெண்டா பார்டன் (Ms.Brenda Barton), அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று (18) சந்தித்தபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது,…

Read More

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்: கைத்தொழில், வர்த்தக அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி – பரந்தனில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மூடப்பட்டிருக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு, வெளிநாட்டு சூழலியல் நிபுணர்கள் மற்றும் உள்நாட்டு சூழலியலாளர்கள் ஆகியோருடன் இன்று காலை (19) விஜயம்…

Read More

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, பிரதேச செயலகப் பிரிவிற்கான விசேட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்  இந்தக் கூட்டத்தில் தந்த திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் நிலைய…

Read More

வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின்  புனரமைப்புப் பணியினை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மது, இணைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வேலனர் சின்னக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் புதிதாக தோன்றப்பட்டுள்ள கிணற்றின் நிர்மாணப்…

Read More

சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

சம்மாந்துறை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோருக்கு எழுத, வாசிக்க தெரியாமல் இருப்பது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டதோடு, நேற்று (17) அங்கு நேரடியாக சென்றும் பார்வையிட்டிருந்தார். அங்கு சென்று பார்க்கின்ற போது, அம்மாணவர்கள் அவ்வாறு குறை கூறும் அளவிற்கு இல்லை எனவும், அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார். மேலும்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – கந்தளாய் பிரதேசத்தில் ஆரம்பம்!

51 வது, 52வது, 53வது, 54வது, 55வது, 56வது, 57வது, 58 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், கந்தளாய் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி மதார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கந்தளாய் பிரதேசத்தில் 07 மில்லியன் ரூபா…

Read More