Headlines

இலங்­கையில் 22,254 தமிழ் பெளத்­தர்கள்

இலங்­கையில் 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். இவர்­களில் வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்­தர்­களும் அடங்­கு­கின்­றனர் என புத்­த­சா­சன அமைச்சு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல கேள்­விக்­கான விடை­ய­ளிக்கும் நேரத்­தின்­போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்­திக பத்­தி­ரணவின் கேள்­விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட பதி­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. புத்­த­சா­சன அமைச்சின் பதிலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குடி­சன மதிப்­பீட்டுத் திணைக்­கத்­தினால் 2012 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். மேற்­கூ­றப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய வடக்கு…

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More

வாக்குறுதிகளை அமுல்படுத்துங்கள் – மன்னிப்புச் சபை

இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன….

Read More

“நிறைவேற்று அதிகாரங்களை பிரதமருக்கு வழங்க முடியாது”

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­த­ம­ருக்கு நிறை­வேற்று அதி­காரம் செல் ­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இச்­ச­பையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் நேற்று புதன்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா? தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்த…

Read More

மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர்

மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டில் யுத்­தத்தை முடித்து வைத்த யுக புரு­ஷ­ராவார். அவரை சிறையில் அடைப்­ப­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சிகள் தவ­றான செயற்­பா­டாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்­காளிக் கட்சித் தலை­வர்­க­ளான தினேஷ், விமல், வாசு­தேவ ஆகி­யோரின் ஆத­ரவு கிடைத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு சபை தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர்…

Read More

தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…

Read More

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது.

Read More

நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வீடுகளை அகற்றியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் சட்­ட­வி­ரோத குடி­யிருப்புக்கள் உடைக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னை­ய­டுத்து அங்கு வசித்த மக்­க­ளுக்கு தமது வதி­விடம் தொடர்பில் மாற்று நட­வ­டிக்கை ஒன்றை முன்னெ­டுக்க சம்­பந்­தப்­பட்ட அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்க தயா­ராக இருக்­கின்றோம் என்று கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதி செய­லா­ள­ரு­மா­கிய அக்­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­ட­யத்தை அடி­ப­டை­யாக கொண்டு ஒரு சிலர் அர­சியல் இலாபம் தேட முனை­வ­தா­கவும் அவர் சுட்­டி­காட்­டி­யுள்ளார். பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் வீடுகள் அகற்­றப்­பட்­டமை தொடர்­பிலும் அதற்கு…

Read More

ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணம்

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார். சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

மூன்று வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை

3 வருடங்களாக, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லையெனக் குற்றஞ்சாட்டி, முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 மனுக்களும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர், அந்த 3 வழக்குகளியிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

Read More