Main News
உடுவே தம்மாலோக்க தேரர் கைது!
உடுவே தம்மாலோக்க தேரர் இன்று(09) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு
செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்தது. சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகாவலி நிலையத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!
மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று (8) பெற்றுக் கொண்டார். பேராசிரியர் விஸ்வா வர்ணபாலவின் மறைவையடுத்து வெற்றிடமாயிருந்த இப்பதவிக்கு அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மென்செஷ்டர் மெட்ரோ பொலிட்டன் பல்கலைகழகங்களில் பட்டப்பின்படிப்பு பட்டதாரியான லேகம்கே, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் சிலோன் எசெட் மெனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் த பினான்ஸ்…
நிதி மோசடிப் பிரிவிற்கெதிரான மனு இன்று விசாரணை
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அரசியல் அமைப்பிற்கு விரோதமாகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பேராசிரியர் காலோ பொன்சேகா மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம்…
அரச பணியாளர்கள் பொதுமக்களை சந்திப்பதில்லை: பிரதமரிடம் முறைப்பாடு
பொதுமக்களுடனான சந்திப்பு தினங்களில் அரச பணியாளர்கள் வேறு கூட்டங்களை நடாத்துவதாகவும் பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறையிடப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பதுளை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் இவ்விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மக்களுடனான சந்திப்பு தினமாக புதன்கிழமைகளில் அரச பணியாளர்கள் வேறு கூட்டங்களை நடாத்தச் செல்வதால், மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதன்கிழமைகளில் வேறு விடயங்களை மேற்கொள்வதைத் தவிர்த்து மக்களை…
மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டனவா.?
யோஷித ராஜபக் ஷவுக்கு எதிரான ஆதாரங்களாக கருதப்படும் பல மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒருவரால் அல்லது குழுவொன்றினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான 234 மில்லியன் ரூபா எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்காததை அடிப்படையாகவும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கைத் துரோகம் செய்தமை , திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் கைதாகியுள்ள யோஷித உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு…
அஜினமோட்டோவுக்கு இலங்கையில் தடை
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது…
ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை முடிவு
நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒப்பந்தம் அல்லது ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளதாக, தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று…
சிறுமி சேயா கொலை வழக்கு மீதான இறுதி தீர்ப்பு இந்த மாதம்
கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி,…
மிக விரைவில் தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளர்
உள்ளூராட்சி சபை தேர்தல் மிகவிரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும். மேலும் விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கு விசேட வசதி செய்யப்படும். வாக்குரிமை உள்ள அனைவரும் தமது வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதோடு வாக்குரிமை தொடர்பில் நாட்டின் பல இடங்களில் விழிப்புணர்வு…
வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை
ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த bbs அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கில் ஆஜரான பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் என நீதிமன்றில் கேட்டுள்ளார். மேலும், குறித்த இந்த வழக்கு…
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்
பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்… ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது. ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு…
