Headlines

மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிப்பு

இன்று முதல் அலகு ஒன்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால்,   1,500 சீசீக்கு மேற்பட்ட மோட்டர்  வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சமரசந்திர தெரிவித்தார்.

Read More

தாஜூடின் கொலை: விசாரணை கோவையை மூடுமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிட்டார்

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின்போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நீதவான் மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளனர். தாஜூடின் கொலை குறித்து நேற்று (26) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி…

Read More

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த நிகழ்வு, “ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும்” என்ற தலைப்பில் இன்று காலை இடம்பெறவுள்ளது….

Read More

பங்களாதேஸின் நிவாரணப் பொருடகள் விமானமூலம் அனுப்பிவைப்பு!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பல உலக நாடுகள் உதவி வரும் நிலையில் பங்களாதேசும் இன்று நிவாரணங்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. குறித்த நிவாரணப் பொருட்களானது பங்களாதேசின் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் பிரதமரான சேக் ஹசினாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அனுப்பப்படுவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த நிவாரணப் பொருட்களில் 100 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள் ,நீரை சுத்தப்படுத்தும் மருந்து உள்ளிட்டவை…

Read More

வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் அமைச்சர் றிஷாத்!

-சுஐப் எம்.காசிம்- இலங்கை மக்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 18 ஆம் திகதி மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளும், ஏனைய இடங்களில் மோசமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிய முடியாத தடங்களாக பதிந்து விட்டன. ”மழை வந்தால் வெள்ளம் வரும். மழை நின்று போனால் வெள்ளம் வடிந்து விடும். இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்க முடியும்” என்று நம்பியிருந்த மக்களுக்கு பேரிடி…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்

1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் நேற்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

Read More

ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது…

Read More

නිරාහාරව සිටි අපේ කුසගින්න නිවා ගත්තේ මුස්ලිම් පල්ලියෙන් කොළොන්නාව ඥාණාලෝක හිමි පවසයි

-නිලුපුලී – කොළොන්නාව ප්‍රදේශයේ ගංවතුර හේතුවෙන් අවතැන්ව සිටීන ප්‍රදේශවාසී ජනතාවට සහනාධාර ලබාදීම සම්බන්ධයෙන් පවත්වන්නට යෙදුනු මාධ්‍ය සාකච්ඡාවේදී මාධ්‍ය වේදියෙකු විසින් නගන ලද ප්‍රශ්නවලට පිළිතුරු ලබාදෙමින් උන්වහන්සේ විසින් එසේ පවසන ලදී.මෙහිදී මාධ්‍ය වේදියා ඇසුවේ මුස්ලිම් සහ සිංහල ජනතාව මුස්ලිම් පල්ලියේ සිට ආධාර සමව බෙදාගන්නේ කෙසේද යන්නයි. “ ඊයේත් අප ඇවිත් සහනාධාර රැගෙන ගියේ මුස්ලිම් පල්ලියෙන් මුස්ලිම්…

Read More

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களை…

Read More

ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி

-ப.பன்னீர்செல்வம் – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜேர்மன் அரசு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் டாக்டர். பிராங்வொல்டர் தெரிவித்திருப்பதாவது, ஜேர்மனியின் சிந்தனைகள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், தமது வீடுகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களுகாகவே இந்த நிதியுதவி எனத் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவியானது இலங்கைக்கென சர்வதேச ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு இலங்கை அரசாங்கத்துடனும் இங்குள்ள…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…

Read More