Main News
சாப்பிட உணவில்லை, பள்ளிவாசல் சென்றே சாப்பிட்டேன்” ஞானலோக தேரர்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. நான் பள்ளிவாசலுக்குச் சென்றே உணவு சாப்பிட்டேன் பள்ளிவாசல்களுக்கும் எமக்குமிடையில் இவ்வாறான ஒரு நல்லுறவு இருக்கிறது என அம்பன்வெல ஞானலோக தேரர் தெரிவித்தார். கொலன்னாவை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ள நிவாரண பணிகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவை மக்களுக்கு நிவாரண உதவிகள் பெரியளவில் வழங்கப்படுகின்றன. இதேவேளை கொலன்னாவையைப்…
கோப் குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்குழு) அடுத்த மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 26 நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த அறிக்கை மூலம் நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் முன்வைக்கப்படும். மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உட்பட 26 அரச நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளை கோப் குழு…
பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈட்டைப் பெற உடன் பதிவு செய்யுங்கள்!
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி குணதிலகவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க அரசாங்கத்தால் 1000 கோடி (10 பில்லியன்)…
உயர்நீதிமன்ற அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.!
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் காரணமாக உயர் நீதிமன்றத்தினால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்துசபாநாயகரினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான தீர்மானமொன்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் அந்த தீர்மானத்தை நீதிமன்றத்தின் கேள்விக்கு உட்படுத்துவது சிறப்புரிமை மீறலா கும். ஆகவே சபாநாயகர் இம்மனு தொடர்பாக தீர்ப்பொன்றை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்….
ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு
ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஆண்டு ஜி-7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் இலங்கை அதிபர் மத்ரி பால சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் அரசால் அழைக்கப்பட்டுள்ளார். தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…
பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த
மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…
எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது – அமைச்சர் றிஷாத்
-சுஐப் எம்.காசிம் – “எதனை இழந்தாலும் நாம் கல்வியை இழக்க முடியாது. இழக்கவும் கூடாது. கல்விதான் எமது ஒரே ஒரு சொத்து” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மல்வானையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, (22.05.2016) அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய அமைச்சர், மல்வானையைத் தளமாகக் கொண்டு, மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளித்து வரும் கல்வி முன்னேற்றச் சங்கத்துக்கும் சென்றார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 750…
ජාති භේද නැති රිෂාද් අමාත්යතූමා විහාරස්ථානයේ අවතැන්ව සිටින ජනතාවට සහනාධාර බෙදා දෙයි
– නිලුපුලී – ගංවතූරෙන් පීඩාවට පත්ව කොටිකාවත්ත විමලාරාම සහ නාගරැක්ඛාරාම යන විහාරස්ථානයන්හී සහ කොලොන්නාව විද්යාවර්ධන මහා විද්යාලයේ රැදී සිටින අවතැන්වූ සිංහල දමිල සහ මුස්ලිමි ජනතාවගේ සුව දුක් විමසීම සඳහා ඊයේ එනමි (මැයි 24) දින එහි ගිය රිෂාඩි බදියුදීන් අමාත්යතූමා විසින් ඔවුන්ට වියලි ආහාර සහ අත්යාවශ්ය ද්රව්ය ඇතූලත් පාර්සල් ලබා දෙන ලදි. මෙම අවස්ථාව සඳහා පළාත්…
நான் அதிகமாக பழகுவது சிங்களவர்களுடனே – மரிக்கார்
நான் வளர்ந்தது வெஹர விகாரையில்,அதிகமாக பழகுவது சிங்களவர்களுடன் எனவே, நான்இனவாதி இல்லை என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கொலன்னாவை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது குறித்த பிரதேச மக்களுக்கு பல்வேறு வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இணையங்கள் ஊடாக இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பலர் இனவாதங்களை தூண்டும்…
தெஹிவளை பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கு, பிக்குகள் கடும் எதிர்ப்பு – நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு அப் பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (23) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதற்கமைய நேற்றுக் காலை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் எதிர்ப்பு வெளியிட்ட பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது ஆர்.ஆர்.ரி. நிறுவன சட்டத்தரணிகளும் பிரசன்னமாகியிருந்தனர்….
ஹிங்குராங்கொட வான்படைக்கு சொந்தமான ஹெலி ஒன்று விபத்து
ஹிங்குராங்கொட வான்படைக்கு சொந்தமான முகாமினுள் பயிற்சியில் ஈடுபாட்டிருந்த வான்படை ஹெலி ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
