Main News
கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபாட்டுக்காக!
கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபடுவதற்காக திறந்து வைக்கும் வைபவம் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக கொத்மலை மகாசாயா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 189 அடி உயரம் கொண்ட மகாவலி மகாசாயா அநுராதபுரம் ருவன்வெலிசாயாவிற்கு அடுத்ததாக மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. கொத்மலை நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கையில் மூழ்கடிக்கப்பட்ட விகாரைகள் மற்றும் அதற்காக தமது சொத்துக்களைத் தியாகம் செய்த மக்களை நினைவு…
வாக்கு உங்கள் உரிமை வாக்குச்சீட்டில் உங்கள் பெயரை பதிவிடுங்கள்!
எமது நாட்டின் அரசியலமைப்பு வலுவாக்கம், நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல் அடிப்படை கட்டமைப்புக்களை தீர்மானிப்பவர்களை உருவாக்க தேர்தல் அவசியம். அதேபோல் நாட்டை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒன்று அவசியம். எமது மக்களுக்கு அரசாங்கம் ஒன்று தேவையாயின் சகலரும் தமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்கு உங்கள் உரிமை அதனால் அனைவரும் கண்டிப்பாக வாக்குசீட்டில் பெயரை பதிவு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை(20) இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்…
முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்
நாடளாவிய ரீதியிலுள்ள சகல முதியோர் இல்லங்களினதும் வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்கள் முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(20) நடைபெற்ற முதியோர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற தேசிய கலந்துரையாடல் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்…
அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்பில்!
நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்திரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று கடந்த 19 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த மேற்படி அவுஸ்ரேலியப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பிட்ட இக்கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத்…
அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் மக்கள் இன்னும் தயாராக இல்லை
அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபையின் வரைவு தீர்மானம் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் 183 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 164 நாடுகள் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள தற்போது இஸ்ரேல் மக்கள் தயாராக இல்லை என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து நெடான்யாஹூ…
கழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி!
ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்துள்ளார் என பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க, சுனாமி உதவி திட்ட மோசடியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின்…
அமெரிக்காவில் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசளித்த பெற்றோர்
அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். அதில் இவரது வீட்டில் சந்தேகப்படும் நிலையில் ஏராளமான சிறுமிகள் இருப்பதாகவும், அவர்களை இவர் கற்பழித்து கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 12 சிறுமிகள் இருந்தனர். அவர்கள் 6 மாத குழந்தை முதல் 18 வயது வரையினர் ஆவர். அவர்களில் 18 வயது…
கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே நீதிமன்றில் ஆஜர்
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சற்றுமுன்னர் கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 27ம் திகதி பாரியமோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி விசாரணைப்பிரிவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்இடம்பெறும் விசாரணை ஒன்றிற்காக இவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இவர்அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாவலப்பிட்டி புகையிரத திணைக்களத்தின் நிலமொன்றை அளுத்கமகே கட்டளைகள்நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த விசாரணைகளுக்காக எதிர்வரும் 27ம் திகதி காலை பத்துமணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்பாவல தீயில் FCID பத்திரங்களும் கருகின
எப்பாவல பொஸ்பரேட், தொழிற்சாலையில் பல பிரிவுகளில் இன்று பரவிய தீ காரணமாக, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய பல பத்திரங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த வாலிபர் கைது
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் வரும் நவம்பர் மாதம் எட்டாம்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார். இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த…
பஸ் கட்டணம் அதிகரிக்க கால அவகாசம்!
பஸ் கட்டணத்தை திருத்துமாறு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பாக தனியார் பஸ்உரிமையாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் போது தீர்வு எட்டப்படவில்லை என அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். எனினும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஒரு…
