Headlines

போராட்டம் வெற்றியாம்!




நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (4) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையிலேயே தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம் காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *