Main News
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதியை முறியடித்த துருக்கி மக்கள்!
துருக்கி நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தினரை பல அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த இராணுவப் புரட்சியை முறியடித்து விட்டதாக அரசுத் தரப்பு கூறினாலும் பல்வேறு பகுதிகளில் பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட…
நாமல் நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பிரதமர் சிங்கபூரிற்கு சென்றார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469 விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய எழுச்சியின் கர்ச்சிக்கும் சிங்கமாக முஸ்லிம்களின் குரலாக முழங்கும் – அர்துகான்
-கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலக மகாயுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ள பின்புலத்தில் … அறபு வசந்தம் காவு கொள்ளப்பட்டதன் பின்னரான உலக ஒழுங்கில் மத்திய கிழக்கில் துரிதப் படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய சியோனிஸ சிலுவை சக்திகளின் கூட்டு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும்…
சர்வதேச வர்த்தகங்களின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்!
சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மாதம் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான முகவர் நிறுவனமொன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் நிறுவப்படுவதுடன் சர்வதேச வர்த்தகம் குறித்த முகவர் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஒரே நாடாக இலங்கை காணப்படும்….
விலை அதிகமா?: 1977க்கு முறையிடவும்
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா ஏழு கன்னி மலை பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்பு
மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் அடங்கியுள்ளனர்.
முன்மாதிரியாக செயற்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிம்
அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகப்பிரிவு ஆசனத்தில் அமராது பயணிகளுடன் சாதாரண ஆசனத்தில் இருந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக பிரிவு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறுகோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார். கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின்…
அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – அமைச்சர் றிஷாத் அனுதாபம்
சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூப்பெரியார் அஷ்ரப் ஹுஸைன் தனது வாழ் நாளை மக்கள் பணிக்காகவே பயன்படுத்தியவர். ஏழைகளின் துன்பங்களையும் அனாதைகளின் கஷ்டங்களையும் தீர்ப்பதற்காக அவர் பல்வேறு சமூக நலன் அமைப்புக்களின் முக்கிய பதவிகளிலிருந்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவியவர். திகாரிய அங்கவீன நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான…
முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி அமைச்சர் றிஷாத் வேதனை
-சுஐப் எம் காசிம் – சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகன-ஹிஜ்ராபுர இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் தும்பர பள்ளிச் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். கல்விதான் நமது சமூகத்தின் அழியாத சொத்து….
துருக்கியில் இராணுவப் புரட்சி : இலங்கையர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு
துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே, துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புலில் வாழும் இலங்கையர்களுக்கான அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில்…
நாமலுக்கு ‘பாய்’ இல்லை
மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெட்ரஸ் வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெட்ரஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெட்ரஸ், அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதற்கு அண்மையுள்ள கூண்டுக்குள்…
