Main News
முன்னாள் தூதுவர் உதயங்கவை கைதுசெய்ய நீதிமன்றில் கோரிக்கை
ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். 2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நுண்பாக நிதிச் சட்டம் விரைவில் அமுலுக்கு!
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வர்த்தமானியில் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்பாக Micro finance நிதிச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. ஏழை மக்களில் அதிமானோருக்கு, முக்கியமாக பெண்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நுண்பாக நிதிக் கடன் திட்டமானது இந்த நாட்டில் ஒரு கட்டுப்பாட்டின்…
அமெரிக்காவின் உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும்…
பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின்…
உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ்!
மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களிலிருந்து விடுதலை பெற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைக் குறித்து அவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அடுத்த வாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைகக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கையின் சுகாதார சேவை மற்றும் சர்வதேச ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் என்பவற்றினை கருத்தில் கொண்டே இவர்களது இவ் விஜயம் அமைந்துள்ளது. பிரதிநிதிகளின்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக கோடீசுவர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே, அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி விட்டார். இதற்கிடையே குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது. இந்த நிலையில் மைக் பென்ஸ் (57) துணை அதிபர்…
“முஸ்லிம் மாணவர்களை காலில் வீழ்ந்து, வணங்குமாறு வற்புறுத்த எவருக்கும் உரிமையில்லை”
வத்தளை, ராகுல வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவனை வகுப்பாசிரியருக்கு கெளரவம் செய்யும் முகமாக அவரது காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்தியமையானது இலங்கை அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளையை வகுப்பாசிரியரும் பாடசாலையின் தேரர் ஒருவரும் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாக வத்தளை அக்பர் டவுன் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித…
பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
பிரான்ஸ் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இதுவரையில் இல்லையென பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே இதனை தனது டவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதேவேளை பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதனை கண்டறிய பிரான்ஸிலுல்ல இலங்கை தூதரகம் தொடர்ந்தும் உள்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரமகவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சுயநல அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து…
கட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சி
பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேசிய அருங்கலைகள் பேரவையும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க…
பொதுபல சேனாவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு
-ஷெஹான் சாமிக்க சில்வா – பொதுபல சேனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு வழக்குகளும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, புனித குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த விடாமல் தடையாக இருந்தமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழங்குகள் தொடர்புடைய…
