Headlines

அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக நடத்திச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 7 அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இது…

Read More

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை

– சுஐப் எம்.காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று காலை (22/07/2016) மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக் கிளை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் உட்பட அக்கிராமத்தின் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விசேட அழைப்பை ஏற்று அங்கு பிரசன்னமாகிய அமைச்சர் பைசர் முஸ்தபா…

Read More

கொழும்பில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பு அண்மித்த சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, கோட்டை கொஸ்வத்த, பத்தரமுல்லை, மாலபே, ஜயவடனகம, தலவத்துகொட, ஹோகந்தர, கலபலுவாவ  ஆகிய பகுதிகளிலேயே நாளை நண்பகல் 12 மணியிலிருந்து தொடர்ந்து 12 மணித்தியால குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் குறித்த…

Read More

29 பேருடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயமானது

சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஏஎன்-32, இன்று காலை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. போர்ட்பிளேயருக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தின் தகவல் தொடர்பு காலை 8.40 – 9 மணிக்கு துண்டிக்கப்பட்டு விமானம் மாயமாகி உள்ளதாக அறிவிக்கபடுகிறது. நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தில் 29 விமானப்படை வீரர்கள் பயணித்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக 8.12 மணிக்கு ராடர் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்ககடலுக்கு மேலே சென்ற போது…

Read More

மஹிந்தவுக்குச் சங்கடம்

மேனகா மூக்காண்டி காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தினால் அலுவலகமொன்று திறக்கப்படுவது உறுதி. இவ்வாறு காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதென்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம். உண்மைகள் வெளியாகிவிடும் என்ற பயத்தினாலேயே அவர், அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்’ என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன கூறினார். காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவது கட்டாயத் தேவையாகும். அவர்கள் எவ்வாறு காணாமற்போனார்கள், அவ்வாறு அவர்கள் காணாமற்போனமைக்கு காரணம் என்ன, அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை…

Read More

தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ளது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சட்­டத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தினால் இதனை இரத்துச் செய்­துள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்­துள்­ளது. தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் வீடொன்­றினுள் முஸ்லிம் பள்­ளி­வாசல் இயங்கி வரு­வ­தாக அப்­பி­ர­தேச மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த முறைப்­பா­டுகள் தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை…

Read More

லக் சதொச நிறுவனத்தின் முகாமையாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

கொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரேமலால் ரணகல லக் சதொச நிறுவனத்தின் அபிவிருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மாதாந்தம் 60,000 சம்பளம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மஹிந்தவின் ஆட்சியின் போது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு, பிரேமலால் ரணகல மிகவும் பங்குவகித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராகும். மேலும் ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கிலும் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், ரோசி சேனாநாயக்கவின் கூட்டத்தை குழப்புவதற்கும் இவர் துணை…

Read More

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சி

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சியானது 12ஆவது தடவையாகவும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இதன்நோக்கம் என இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து தெரிவித்துள்ளன. மேலும், இந்த கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தொலைபேசி…

Read More

கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த, பெறுமதி 4500 மில்லியன் ரூபா (படங்கள்)

பேலியகொடை, கொள்கலன் களஞ்சிய தொகுதியில் மொத்தம் 300 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கொள்கலன் களஞ்சிய தொகுதியிலுள்ள சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்தே கொக்கேய்ன் கைற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி 4,500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல்…

Read More

பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்புமே நல்லிணக்கத்திற்கான வழி!

நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதுவே நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான வழி என்றும் தெரிவித்துள்ளார். போர்த்துக்கல், அயர்லாந்து, மெக்சிக்கோ மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (21) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கை தேயிலை உலகெங்கிலும் பிரசித்திபெற்றுத் திகழ்வதாகத் தெரிவித்த மெக்சிக்கோ…

Read More

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது. தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது. பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை…

Read More

இலங்கை தொழின்மையாளர்களுக்கு, மலேசியாவில் பல்வேறு தொழில் வாய்ப்புகள்

இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் அஹமட் சஹீட் ஹமீட் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலேசியாவுக்கான ஒரு உத்தியோகபூர்வ…

Read More