Headlines

ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!

ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது. ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது…

Read More

சர்வதேசத்துடன் வேறு வெளிக்கடப்பாடுகள் கிடையாது

சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும் தாம் அன்று பண்டாரநாயகவின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக் கடப்பாடுகள் தமக்குக் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம்(24) முற்பகல் வரக்காபொல நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர்மசிறி சேனாநாயக்க அவர்களின்…

Read More

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு!

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்று நாளை 27 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல்…

Read More

அனைவரும் கை­கோர்க்க வேண்டும் – ரிஸ்வி முப்தி

இந்­நாட்டு முஸ்­லிம்கள் தமது முன்­னோர்­களால் பெற்றுத் தரப்­பட்ட உரி­மை­களைப் பாது­காத்துக்  கொள்­வதில் அர­சியல் மற்றும் பிரி­வு­களை மறந்து கை­கோர்க்க வேண்டும். கிடைத்­துள்ள உரி­மை­களைப் பறி­கொ­டுத்து விடாது  உள்­ளதைப் பாது­காத்துக் கொள்­வதில் நாம் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தலை­வ­ராக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வரு­டாந்த மாநாடும் புதிய நிர்­வா­கிகள்…

Read More

ஆட்சியை கவிழ்க்கலாமென கனவு காண்கிறது மஹிந்த அணி

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என  மகிந்த தலைமையிலான குழுவினர் கனவு காண்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது. பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல்…

Read More

1000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கான நியமன கடிதம்

இதுவரை காலமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத ஆயிரத்து 34 வைத்தியர்களுக்கும், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமன கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வொன்றில் வைத்தே இந்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வின் போது, பிரதி சுகாதார அமைச்சர் பைசல் ஹாசிம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோர் கலந்துக் கொள்ள…

Read More

அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார். இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள்…

Read More

நீதிபதிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரதம நீதியரசரும் குறித்த…

Read More

இலங்கைக்கு கல்வித்திட்டத்துக்கு தென்கொரியா உதவி

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த ஆசிரியர் பயிற்சி திட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குவாங்ஜூ நகரிலுள்ள கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த போதே, இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு, தென்கொரியா உதவும்’ …

Read More

மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை!

நாட்டில் இன்னொரு ஆயுத போராட்டத்தை தடுக்கும் வகையிலும் இன ஐக்கியத்தை பலப்படுத்துவதற்குமான  தேவை உள்ளது. இதற்காக நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே புதிய அரசியல் அமைப்பே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது….

Read More

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு  நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின்  அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.எம்.எஸ்.டி.எப்.இனசுமா மற்றும்  சுசுட்சுக்கி போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளது. இதேவேளை குறித்த கப்பல்களில் வந்துள்ள ஜப்பான் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Read More

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஈரானிய அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈாரானுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டதனால் ஈரானில் இருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More