Headlines

ஜம்இய்யத்துல் உலமா தலைவராக மீண்டும் ரிஸ்வி முப்தி!

மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (24.07.2016) பி.ப. கண்டி லைன் பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது. சுமார் 25 மாவட்டங்களிலுள்ள மாவட்டக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் ஆகியோரே மத்திய சபையின் அங்கத்தவர்கள் ஆவர். சுமார் 75 பேர்கள் கொண்ட இச்சபையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 25 பேர்கள் நிறைவேற்றுக்…

Read More

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும்…

Read More

இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை

இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு…

Read More

குடும்பமே படுகொலை: குடும்ப தலைவன் கைது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்கதின் பேரின் அக்குடும்பத்தின் தலைவனை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே…

Read More

கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்

-மொஹொமட் ஆஸிக் – கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குறலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திதி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்துவருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு கள்வர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எதனை…

Read More

அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது. இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது. இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­டத்தின் மூலம் இலங்கை நல்ல நிலையில்…

Read More

தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத்…

Read More

சர்வதேசத்திடம் மண்டியிடோம்!

உள்ளகப்பொறிமுறை ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், சர்வதேசத்திடம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மறைமுக அடக்குமுறை தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்சாரக் கதிரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றி விட்டோம். சர்வதேசத்திடம் நாம் மண்டியிட மாட்டோம் என…

Read More

இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்

இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்னும் குறித்த சேவையானது  24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய…

Read More

பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காராம விகாரையில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது. இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது. நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர்…

Read More

ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More