Headlines

பாடசாலைகளை அண்மித்த போதைப்பொருள் விற்பனையினை தடுக்க நடவடிக்கைகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும்  பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம் உழைக்கும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். காலி கத்தலுவ மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (27) முற்பகல்…

Read More

பௌத்த சமயத்திற்கு பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது

நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது எனத் தெரிவித்தார். பௌத்த மக்கள் உள்ளடங்களாக எல்லா சமயங்களும் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு முன் வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (27) பிற்பகல் கெட்டம்பே…

Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

நாமலை உடனடியாக, கைதுசெய்ய நீதிபதி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று -28- உத்தரவிட்டுள்ளார். கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார். இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…

Read More

பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாது ; நாமல்

அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதனை உடைத்தெறிந்துள்ளோம். மக்களின் பலத்துடன் வீதிக்கு இறங்கியுள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை தேட இப்போது முயற்சிக்கின்றார். அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்தி சுயாதீன தன்மையை சர்வதேசத்திடம் ஒப்படைத்து நாட்டை…

Read More

அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று -28- வியாழக்கிழமை  ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நோர்வே தூதுவர் – பாதுப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்போஜோன் கோஸ்டாசேதார், பாதுகாப்பு செயலாளர் திரு பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் வைத்து நேற்று (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது அவர்களிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

Read More

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பேதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்டி,கொழும்பு,அம்பாந்தோட்டை நகரங்களை மையப்படுத்தி அபிவிருத்தி வலயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாகவும் பிரமதர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேல்மாகாணம் ழுமுவதும் பெரிய நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தையும் சீனாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி…

Read More

தாருஸ்ஸலாம் விவகாரம்: முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் கண்டன அறிக்கை

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை…. கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கடந்த 20 வருடங்களான இதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் நான் மாகாண சபை உறுப்பினராக எதிர்க் கட்சி வரிசையில் இருந்துகொண்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். அதிகாரம் நமது கையில் இல்லாமையினால் குருகிய வேலைத்திட்டங்களை மாத்திரமே எம்மால்…

Read More

நாமலின் வழக்கு ஒத்தி வைப்பு

நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கை ஓகஸ்ட் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது…

Read More

“ஊழல் மற்றும் இலஞ்சம்” புதிய பாடத்திட்டம் அறிமுகம்

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறிகளை 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல்…

Read More

முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன் – சங்ககார

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம். இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட்…

Read More