Headlines

எவ்வித அச்சம், சந்தேகமுமின்றி யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கலாம்

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாது­காப்பு முழு­மை­யாக உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே எவ்­வித அச்­சமும் சந்­தே­க­மு மின்றி சுதந்­தி­ர­மாக கல்வி நட­வ­டிக்­கை­க ளில் ஈடு­ப­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை விடுத்­துள்ளார். யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர், விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் பெற்­றோர்கள் நேற்று பிற்­பகல் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அண்­மையில் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற மோதல் சம்­பவம் மற்றும் மாண­வர்­களின் பாது­காப்­புக்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இங்கு கருத்துத்…

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு (SLTJ) எதிராக பொது பல சேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொது பல சேனா சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை…

Read More

இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடரை நாட்டில் நடத்த எதிர்பார்ப்பு

தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா ஹிடம் (Tun Musa Hitam) தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை சந்தித்த போதே இவ்விடயத்தினை தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் நடைபெறும் 12 ஆவது…

Read More

பிரதமர்நா ட்டை வந்தடைந்தார்!

இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று (3) இரவு நாடு திரும்பியுள்ளார். 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு பயணமாகியிருந்தார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்துக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையும் சீனாவும் கூட்டுக்குழுவை அமைக்க இணக்கம்

இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் குறித்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதில் குறித்த பிரதேசத்தில் கைத்தொழில் துறைக்கான நிலத்தை ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

Read More

ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு தகு­தி­யற்­ற­வர் – ஒபாமா

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப் தகு­தி­யற்­றவர் அவரை, அனை­வரும் நிரா­க­ரிக்க வேண்­டு­மென  ஜனா­தி­பதி ஒபாமா கோரி­யுள்ளார். அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் நேற்று முன்­தினம்  நடந்த செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா, ஜன­நா­யகக் கட்சி வேட்­பா­ள­ரான ஹிலாரி குறித்து கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரும் ட்ரம்ப் ஜனா­தி­பதி பத­விக்கு தகு­தி­யற்­றவர். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக யாரையும் ஆத­ரித்து இந்த கருத்தை நான் கூற­வில்லை. ட்ரம்ப் எனது கட்­சியைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் நான் இதே கருத்தை தான் கூறியிருப்பேன்….

Read More

முஸ்லிம் இன படுகொலை: விசேட நீதிமன்ற விசாரணை தேவை – தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் கோரிக்கை

முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான இன படு­கொ­லை­களை விசா­ரிக்க விஷேட நீதி­மன்­ற­மொன்­றினை அமைக்­கு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­டமும் தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது. 26 ஆவது தேசிய ஷுஹ­தாக்கள் தினத்­தை­யொட்டி நேற்று புதன்­கி­ழமை தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான ஆண்­டாகும். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்­தோ­டி­யது. கிழக்கு மாகா­ணாத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்லிம்…

Read More

நோர்வே பிரதமர் நாட்டை வந்தடைந்தார்

நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார்.

Read More

ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலைபேசி…

Read More

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் (4) தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் போராட்டம் தொடர்வதாகவும்…

Read More

சுதந்திர கட்சியின் மத்தியக்குழு சந்திப்பு இன்று

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 65 ஆவது  ஆண்டுநிறைவு மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தவைவர் சாந்த பண்டார தெரிவித்தார். எவ்வாறாயினும் கூட்டு எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த…

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (04.08.2016) ஆஜராகியுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More