Main News
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவசர கலந்துரையாடல்
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர். குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
இனவாதிகளிடம் சிக்கிய முஸ்லிம் பாடசாலை!
– இக்பால் அலி – இனவாத ஆதிக்கம் நல்லாட்சியிலும் நிறுவனமய ப்படுத்த ப்பட்டுள்ளது என்பதற்கு ஹிரியுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்;டு மைதானப் பிரச்சினை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பள்ளிக் கூட மாணவர்களின் விளையாட்டு மைதானம் என்று கூட கருணை காட்ட வில்லை. பாடசாலை மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தக் கோரி இனவாதிகள் மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக…
றிஷாதின் சமூக உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் – பிரபா கணேசன்
-சுஐப் எம். காசிம் – அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அட்டூழியங்கள் இடம் பெற்று சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு கொதித்தெழுந்து நாட்டுத்தலைவரையே நிலை குலையச் செய்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனே என்று முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் இன்று மாலை தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூல் ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக்…
எதிர்வரும் 11ம் திகதி பொதுமக்களுக்கு சிக்கலான நாள்!- விமல்
எதிர்வரும் 11ம் திகதியானது இலங்கை மக்களுக்கு மிகவும் சிக்கலான நாள் என்றுபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசானது சர்வதேசத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுவதாகவும்அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். அரசு சர்வதேசத்திற்கு அமைய செயற்படுவதாலேயே பொருளாதாரத்தில் சரிவைஎட்டியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது பெரும் சுமையை தினிப்பதன் பொருட்டு பாராளுமன்றில் எதிர்வரும்11ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்த சட்டமூலத்திற்கு…
பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்படும் : லக்ஷ்மன்
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கி இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணும் விதத்திலான புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே தேசிய அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சப்ரகமுவ மாவட்டத்தில் நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல…
முஸ்லிம் சமுகத்தின் மீது, வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர் – றிஷாத்
-சுஐப் எம். காசிம்- பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கலாபூசணம் எம். இஸட் அஹ்மத்; முனவ்வர் எழுதிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளியீட்டு விழாவும் முஸ்லிம் சேவைக்குப் பணியாற்றிய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம…
கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் யோஷித்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 7 கறுவாத் தோட்ட பொலிஸாரே யோஷித்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ரக்பி போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். யோஷித்த ராஜபக்ச அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகத்திற்கும் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் இடையில் ஸ்ரீலங்கா சூப்பர் செவன் ரக்பி போட்டியின் போது இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.
மைத்திரி நாளை காலிக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலிக்கு விஜயம் செய்கிறார். காலி மழ்ஹருஸ் ஸுல்ஹியா மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்குபற்றுவார். காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்பெறும். அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, பிரதியமைச்சர் மனுச நாணயக்கார உட்பட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விழாவில் பங்குபற்றுவர். பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதன் 71–வது ஆண்டு நினைவுதினம் இன்று (6–ந்தேதி) முதல் 9–ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய இடங்களில், இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய நேரமான காலை 8.15 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று அணுகுண்டு தாக்குதலில்…
வழமைக்கு திரும்பியது தர்ஹா நகர்
தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது. தர்ஹா நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர். தர்ஹா நகருக்குச் சென்ற டெங்கு ஒழிப்பு பிரிவினர், டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை விசிறியுள்ளனர். அதன்போது, அவர்கள் விசிறிய புகை அங்கிருந்த கடையிலுள்ள பொருட்களின் மீது பட்டதாகக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். பின்னர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் புகை விசிறிய தொழிலாளி ஆகியோரை கடைக்குள்…
சீனா செல்கிறார் பிரதமர் ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
கல்லிசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்று, அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
