Main News
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்
-லியோ நிரோஷதர்ஷன் – அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.
முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் உள்ளன – அமைச்சர் ராஜித
முஸ்லிம்களின் உணவு தொடர்பில் கடந்த காலங்களில் சில தரப்பினர் விமர்சனங்களை ஏற்படுத்தினர். அதனை ஹலால் பிரச்சினையாகக் கொண்டு வந்தனர். எனினும் முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் என்கின்ற இரு விடயங்கள் உள்ளன. ஹலாலானவற்றை உண்பதற்கே அவர்களுக்கு சமயத்தில் அனுமதியுண்டு. இஸ்லாம் சமயத்தின்படி மதுபானம் அருந்துவது ஹராமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மதுபானம் பாவிப்பதில்லை. அது வரவேற்கத்தக்க விடயமாகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ‘மதுசாரமற்ற இலங்கை’ எனும் தொனிப்பொருளிலான தேசிய மாநாடு நேற்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு…
பொரளஸ்கமுவ பள்ளிவாசலுக்குள், புகுந்து தாக்குதல்
பொரளஸ்கமுவ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (06) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளிவாசலில் பணியாற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்லாத்துக்கு முரணான IS உடன், இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
Forum for National Unity என்ற அமைப்பினால் நேற்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாராட்டுவதற்காக, வெள்ளவத்தை The Excellency மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் உரையாற்றுகையில், ISIS என்பது இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். இதே வைபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர் செய்துவரும் சூழ்ச்சிபற்றியும் குறிப்பிட்டார். போலி ஈரானிய பாஸ்போட்டில்…
இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பல்கலைக்கழக பட்டதாரியான இளைஞர்
இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார். மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்…
புகையிலைக்கான வரியை 90 வீதமான உயர்த்த முடிவு
புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை பிரகடனத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலத்திலேயே புகையிலைக்கான வரி 90 சதவீதமாக காணப்பட்டதாக, அமைச்சர்…
மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய – இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட்…
தம்புள்ள பள்ளிக்கு காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம்
தம்புள்ள ஜும்மா பள்ளியை நிர்மாணிக்கும் காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ள பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தம்புள்ள தொகுதி அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ப்ரியான் விஜேரத்ன தலைமையில் நடைபெற்ற போது தம்புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கென இனங்காணப்பட்டுள்ள காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவது தொடர்பில் மத்திய…
காஷ்மீர் உயர்நீதிமன்றம் ராணுவத்திற்கு எச்சரிக்கை !
– அபூஷேக் முஹம்மத்- காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது . ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல் மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ? அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை…
தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : கம்மன்பில
இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது வடக்கு, கிழக்கையும் இந்தியாவையும் இணைப்பதாக அமையும். எனவே இந்தியா- இலங்கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பு பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஆசிய அபிவிருத்தியின் உதவியில் இலங்கை–இந்தியாவை நிரந்தரமாக இணைக்கும் ஹனுமான்…
பணிக்கு திரும்பாத ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் : மொஹான்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (5) முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இன்று பணிக்கு திரும்பாத ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என, பல்கலைக்கழக தொழிற்சங்க…
