Headlines

இந்தோனேசிய ஜனாதிபதி – பிரதமர் ரணில் சந்திப்பு

-ஆர்.ராம் – இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து சந்தித்தார். இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார், இந்தோனேசிய ஜனாதிபதியின் முதற்பெண்மணி, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர். இச் சந்திப்பின் போது, இலங்கையின் வர்த்தக பொருளாதார கலாசார துறைகளை…

Read More

புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி

புற்­று­நோ­யாளர்­களின் சிகிச்­சை­களின் பொருட்டு, இல­வச மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்­கு­மாறு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான பிர­தான நட­வ­டிக்­கைகள் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரத்­ன­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அண்­மைக்­கா­ல­மாக இலங்கை பல்­வேறு தொற்­று­நோய்கள் மற்றும் தொற்­றா நோய்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளது. இதனால் அநே­க­மான நாடு­களின் பார்வை இலங்கை மீது திரும்­பி­யி­ருந்­த­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அந்த வகையில் தற்­போது இலங்கை மக்­க­ளுக்கு புற்­றுநோய் குறித்த…

Read More

அதிக தற்கொலை இடம்பெறும் 5 நாடுகளுள் இலங்கை

உலகில் கூடு­த­லாக தற்­கொலை செய்­து­கொள்ளும் மக்கள் உள்ள ஐந்து நாடு­களுள் இலங்­கையும் உள்­ள­டங்­கி­யிருப்­ப­தற்கு உடல் மற்றும் மன நிலையில் அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்டு வரு­வதே முக்­கிய கார­ண­மாகும். இதனை யோகா உடற் பயிற்சி முறை மூலம் சம­நிலைப்படுத்­தலாம் என களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலா­நிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.

Read More

பாராளுமன்ற உப குழு தென்னாபிரிக்காவுக்கு விஜயம்

தென்னாபிரிக்கா அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை சரத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையின் பாராளுமன்ற குழுவொன்று தென்னாபிரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. பாராளுமன்ற உப குழுவின் உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், எஸ்.சிறிதரன் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, வைத்திய கலாநிதி  துசித்த விஜயமான்ன, அதுரலியே ரத்தினத்தேரர் மற்றும் சல்மான் ஆகியோரே இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில், அடிப்படை உரிமைகளை சரியான முறையில் அமுல்படுத்தும் நோக்கத்திலேயே குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழு தென்னாபிரிக்காவின் சட்ட…

Read More

தேர்தல் சட்டத்தை திருத்த தீர்மானம்

2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கு பணிப்புரைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் இந்த…

Read More

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் உயிர்த்தியாகி அலி உதுமான்

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி உதுமானின் உயிர்த்தியாகம் மறக்கப்பட முடியாதொன்றாகும். இவ்விடத்தில், “தியாகிகள் மரணிப்பதில்லை” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இஸ்லாத்தின் வரலாறு இரத்தங்களாலும் பல யுத்தங்களாலும் வரையப்பட்ட காவியமாகவே இருக்கின்றது. முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கிய மர்ஹூம் அஷ்ரபோடு ஆரம்ப காலத்தில் 1980 களில் இருந்து ஒன்றாக பாடுபட்ட அலி உதுமான் அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தீவிரவாதிகளின்…

Read More

மாடறுப்புக்கு எதிராக சிங்ஹ லே போராட்டம்

இலங்­கையில் மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான போராட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக சிங்ஹ லே அமைப்பு தெரி­வித்­துள்­ளது. கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்து இலட்­சக்­க­ணக்­கா­னோரின் கையொப்­பத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்­றினைச் சமர்ப்­பித்தும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொள்­ள­வில்லை என அவ்­வ­மைப்பு குற்றம்சாட்­டி­யுள்­ளது. மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்­கை­களை மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை விரைவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள்…

Read More

டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு

உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும்…

Read More

காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் – அ.இ.ம.கா

காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் கொடுமைகளையும் – உரிமை மீறல்களையும் அ.இ.ம.கா வன்மையாகக் கண்டிக்கிறது கடந்த சில நாட்களாக காஷ்மீர் மக்களுகெதிராக நடத்தப்படும் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனம் மற்றும் மனித படுகொலைகள் மனித நேயத்தையும் மனித தர்மத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது, தமது நாட்டு மக்களை தமது இராணுவமே கொன்று குவிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பலஸ்தீன், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடக்கும் மனித படுகொலைகளுக்கு, காஷ்மீரில் நடக்கும் கொலைகள் இரண்டாம் தரத்தில் இல்லை. இந்தியாவில்,…

Read More

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு புதிய பதவி

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53 ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி…

Read More

தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதிக்கு கோரிக்கை

நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள் முகம்கொடுத்துள்ள தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More