Main News
சமுர்த்தி திட்டம் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படவுள்ளது
சமுர்த்தி திட்டம் மிகவும் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (23); ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்;பிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒழுங்கில்லாத நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்ததால் அது திருப்தியளிக்காத அமைப்பாக மாறியுள்ளது. இதனை நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சமுர்த்தி…
வர்ணக் குறியீடு இல்லாத 11,125 பான வகைகள் மீட்பு
உணவுப் பாதுகாப்பு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இதுவரை வர்ணக் குறியீடு இல்லாத 11,125 பான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி நேற்று மாத்திரம் 5116 வர்ணக் குறியீடுகள் இல்லாத பான வகைகள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை வர்ணக் குறியீடு அற்ற பானங்களை அந்தந்த நிறுவனத்திடமே மீளளித்து விட்டு, குறியீடுடன் கூடிய பானங்களை மட்டும் விற்பனை செய்யுமாறு, வர்த்தகர்களுக்கு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர். நேற்று நாடுபூராகவுமுள்ள வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள்,…
நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை
நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல் கடந்த காலங்களில் நிலவியதாக தபால் அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்தார். சிரேஷ்ட உத்தியோகத்தர்களை கடமையில் இணைத்து கொள்வதற்கான பரீட்சை அண்மையில் நடைப்பெற்றதுடன் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த 150 பேர் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, 750 தபால் ஊழியர்களை கடமையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் 350 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரோஹண அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40 இற்கு உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் மஹிந்தாநந்த அளுத்கம
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தீர்மானித்துள்ளார். குறித்த பதவி விலகல் கடிதத்தை மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும், இதுவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகாத 12 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருமாறு எனக்கு தொலைபேசி அழைப்பு வருது
கிழக்கில் வலுவான முஸ்லிம் சக்தி உருவெடுத்து வருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருமாறு தினமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நிலையங்களை அகற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் பாராளுமன்ற…
இலத்திரனியல் கருவியின் மூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு
எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பை, இலத்திரனியல் கருவியின் மூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பிக்கும் போது, இந்த ஏற்பாட்டை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்துக்குள் வாக்குப்பதிவுக்கு இலத்திரனியல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்திருப்பினும், இதுவரையில் அது நிறைவேறாதுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மலேஷியா செல்கிறார் மஹிந்த
ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகி, 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ…
350 பேருக்கு சமாதான நீதவான் பதவிகள்
நாட்டில் சமுக சேவையில் ஆர்வம் காட்டி வரும் 350 பேருக்கு சமாதான நீதவான் பதவகள்வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இம்மாதம் 31ம் திகதி புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. சமாதான நீதவான் பதவி மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்படும் கௌரவ பதவியாகும்.
மஹிந்த வடக்கு மக்களை காட்சிப்பொருளாக்கினார்
யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். கட்டிடங்கள் அமைக்கப்பட்டன, வீதிகள் புனரமைக்கப்பட்டன, ஆனால் வடபகுதி தமிழ் மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார். வடக்கு மக்களின்…
தாஜூடீன் கொலை! தொலைபேசி அழைப்பு விபரங்கள் முழுவதும் அழிப்பு
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையின் மேலதிக செயலாளர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களில் இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தொலைபேசி அழைப்பு விபரங்களை அழித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது….
வருகிறது ஊடக மத்திய நிலையம்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும்….
