Main News
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்!
-லியோ நிரோஷ தர்ஷன் – புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில் காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணான வகையில் இந்த பரிந்துரைகள் அமைந்துள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அவசரப்பட வேண்டாம் : அரசாங்கம்
-ஆர்.யசி – பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இது தொடர்பான பொறிமுறைகள் சரியான பலமடையும் வரையில் எவரும் அவசரப்பட வேண்டாம். இந்த ஆட்சியில் உண்மைகள் கண்டறியப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது. காணாமால் போனோர் அலுவலக சட்டமூல உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க செயலணி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரும்…
137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய…
1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடி – இராதாகிருஸ்ணன்
நுவரெலியா மாவட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று பரீட்சை மோசடிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய அடையாள அட்டைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 305 மாணவர்கள் கணித பிரிவிலும், ஏனையவர்கள் வர்த்தக பிரிவிலும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் 25…
கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!
கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையில் ஆக்ககூடிய புள்ளிகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது
2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற 12 மாணவர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களையும் விருதுகளையும் பெறவுள்ளனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என கல்வியமைச்சின் பாடசாலை அலுவல்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டபிள்யு.கே.எம்.விஜயதுங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வருடந்தோறும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு.விஜயதுங்க கூறினார். இன்றைய பரிசளிப்பு விழாவில் கல்வியமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பார்கள். இதற்கு மக்கள் வங்கியும் தனியார் நிறுவனங்களும் அனுசரணை…
நீதிபதியின் அதிரடி உத்தரவு: நாமல் அதிர்ச்சி!
பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த எச்சரிக்கையின் மத்தியில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தவறான முறையில் பெற்றுக் கொண்ட 45 மில்லியன் பணத்தை தனது இரண்டு நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்த சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றில் நாமலை ஆஜர்படுத்திய வேளை, பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு வழங்கியிருந்தார். இதன்போது நீதிமன்ற…
முப்படைகளின் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பேன் ; ஜனாதிபதி
முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு…
மஹிந்த வர வாய்ப்பில்லை!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அன்றையதினம் (ஆண்டுவிழா நாளில்) தனக்கு சர்வதே…
குறைவடைந்தது பணவீக்கம்
இந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.7 சதவீதத்தாலும், உணவில்லா பொருட்களின் செலவுப் பெறுமதி 0.1 வீதத்தாலும் குறைவடைந்தமை இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் மரக்கறி, தேங்காய், உடன்மீன், சீனி, கோதுமை மா, அரிசி, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பெறுமதியும்…
கவர்ச்சிமிக்க இடமாக கொழும்பு உருவாக்கப்படும்!
லண்டன், நியூயோர்க் மற்றும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹொங்கொங்இ சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பவற்றின் அனுபவங்களை பெற்று அதனை விட கவர்ச்சி மிக்க இடமாக கொழும்பு நிதி நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது: துறைமுகம், விமான நிலையம் மற்றும் நிதி நகரத்தை அண்டியதாக மாநகர திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எமது தேசிய பூகோள வரைபடத்தை மீள…
துருக்கி தாக்குதல் குறித்து இலங்கை கண்டனம்
துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
