Headlines

இலத்திரனியல் கருவியின் மூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு




எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பை, இலத்திரனியல் கருவியின் மூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பிக்கும் போது, இந்த ஏற்பாட்டை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்குள் வாக்குப்பதிவுக்கு இலத்திரனியல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்திருப்பினும், இதுவரையில் அது நிறைவேறாதுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *