Headlines

ஐ.தே.க 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு: வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என…

Read More

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கையே காரணம்

முன்னைய அரசாங்கம் தமக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் உள்ளுராட்சி மன்றங்களின எல்லைகளை நிர்ணயம் செய்திருந்தது. அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருத்த யோசனைகள் கிடைத்ததும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (25) சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உறையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இந்த விடயத்தை குறிப்பிட்டார். உள்ளுராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

Read More

பம்பலப்பிட்டி மாணவி கடத்தல், விடுவிக்க 75 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்படுகிறது

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி…

Read More

சுற்றுலா தலைமைத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு செப்டெம்பரில்

சுற்றுலா தலைமைத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 2020ம் ஆண்டில் உயர்நிலை வருமானத்தைக் கொண்ட சுற்றுலாத்துறை நாடாக இலங்கையை தரமுயர்த்துவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று கலாநிதி காமினி பெரேரா தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் உலக நாடுகளின் புத்திஜீவிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் சர்வதேச சுற்றுலா தினத்திற்கு அமைய பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துதல் பாதயாத்திரை, மரநடுகை, கிரிக்கெட் போட்டி முதலானவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்…

Read More

இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை உப்பு நிறுவனம்!

இலங்கை உப்பு நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் இதன் மீது இருந்த அனைத்து கடன்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் உப்பு நிறுவனம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், நிறுவனத்தின் இயந்திரங்களை அடமானமாக வைத்தே வங்கிகளில் கடன் பெற்றதாகவும், இதனால் கடன் தொகை இரட்டிப்பாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நல்லாட்சியின் பின் புதிய நிர்வாகத்தின் கீழ் அனைத்து கடன்களும் மீள் செலுத்தப்பட்டு தற்பாது அதிக இலாபமீட்டும்…

Read More

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்த திட்டம்!

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது. இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்…

Read More

போராட்டம் கைவிடப்படாது – ஞானசார தேரர்

வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை.எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக…

Read More

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்… பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத் கோரிக்கை… காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார். இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, காணாமல் போனோர் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள…

Read More

லசந்த கொலை: நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர் நீதிமன்றில் சாட்சியமளிக்கக்கூடிய மனோ நிலையில் இருக்கின்றாரா என பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இதேவேளை இந்த கொலை தொடர்பிலான சந்தேக நபர்களின்…

Read More

மன்னாரில் நீர் விநியோகம் துண்டிப்பு

மன்னாரில் பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால்இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால்முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்குஅமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில்பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00மணிவரை நீர் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More

நிதி அமைச்சர் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள எட்டாவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  நிதி அமைச்சர் ரவி   கருணாநாயக்க இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய விடயங்களும், பொருளாதார  பிராந்திய முதலீடுகள் பற்றிய விடயங்களும் முதன்மை பெறுகின்றன. பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் இந்த மாநாட்டில் அமைச்சரின் செயலாளர் டாக்டர் சமரதுங்கவும் வேறுசில அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளார்கள்.

Read More

மருந்துப் பொருள் விலை ஒழுங்குறுத்தும் முறை குறித்து அரசாங்கம் கவனம்

மருந்து விலையை ஒழுங்குறுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நியாய விலையில் மருந்துகளைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நேற்று (24) நுகர்வோர் அதிகாரசபையில் நடைபெற்றது.. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி அசித டி சில்வா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read More