Main News
இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்!
இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3 N2 என்ற வைரஸ் தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் வைரஸ் நிபுணர் ஜூட் ஜயமஹா…
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்
இலங்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால இதனை அறிவித்துள்ளார். இந்த நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது டெங்கு மற்றும் சீக்கா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுளம்புகளினால் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப…
சட்டம் மற்றும் ஒழுங்குகளால் அரசாங்கத்துக்கு வருமானமிழப்பு
கெலும்பண்டார, யொஹான்பெரேரா தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் காரணமாக, அரசாங்கம் வருமானத்தை இழந்து வருகின்றது என்று, பொதுக்கணக்கு குழுவின் நாடாளுமன்ற கண்காணிப்புகுழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ணவால் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. ஒரு கணினி தரவு முறைமையைக் கொண்டு வந்து, இந்தக்குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அமைச்சுக்கள் அடங்களாக மொத்தம் 41 அரச நிறுவனங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு…
அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது நிதி மற்றும் பாலியல் ரீதியில் லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அறிவித்துள்ளார். குறிப்பாக இக்காலப் பகுதியில் 2017 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை தரம் 01 இற்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, எந்தவொரு அதிபராவது இவ்வாறு லஞ்சம்…
க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு 715,000 விண்ணப்பங்கள்
இந்த ஆண்டிற்கான கல்வி பொதுத்தரா தர சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் அணையாளர் நாயகம் டபுள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
“அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள்” றிஷாத் அவசர வேண்டுகோள்
-ஊடகப்பிரிவு – அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல. ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு…
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாது’
“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக்…
20ஆயிரம் மில்லியன் முதலீட்டில் டெக்னோ சிட்டி ஆரம்பம்
-அஷ்ரப் ஏ சமத் – ”டெக்னோ சிட்டி” (விஞ்ஞான தொழில்நுட்ப நகரம் ) நேற்று (22) கொழும்பு – ஹோமகமவில் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முதலாம் கட்டத்திற்காக 20ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது. மேல்மாகண மெகா பொலிசி அமைச்சா் சம்பிக்க ரணவக்கவும், விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, உயா்கல்வி அமைச்சும் இணைந்தே இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்காக தேசிய விஞ்ஞான நிலையம் 3ஆயிரம் மில்லியன் ருபா, ஆர் த சி…
வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும்
நாட்டின் பல பிரதேசங்களிலும் காணப்படுகின்ற வரட்சியினை கருத்திற்கொண்டுஅவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இந்த வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும்கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். கடும் வரட்சியினால் மக்கள் குடிநீர் இன்றி அவதியுறுவதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக விவசாயிகள் அதிகம் இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவேவிவசாயிகளுக்கு நிவாரண நிவர்த்திக்காக அவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறும்பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!
ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.
பதிவு செய்யாமல் வெளிநாட்டு வேலைக்குச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல்!
பதிவுக்கு உட்படாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தலாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இளம் நாடாளுமன்ற அமர்வுகளில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பதிவு செய்து கொள்ளாது சுற்றுலா வீசா மூலம் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. அரசாங்கத்தின் பதிவுக்கு உட்படாது மேற்கொள்ளப்படும்…
