Main News
காலியில் நில அதிர்வு!
காலியில் இன்று (27) சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபுகல பகுதியில் இன்று அதிகாலை இந்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த நில அதிர்வு தொடர்பான தகவலை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எப்படியிருப்பினும் நில நடுக்கம் அல்லது நில அதிர்வு தொடர்பில் இதுவரை எவ்வித பதிவுகளும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு…
நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி
இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…
விமானநிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்
விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சிகளை உடைப்பது ராஜபக்சக்களுக்கு பொழுதுபோக்கு – சந்திரிக்கா
கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று (26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவடையச் செய்வது சிலரின் பொழுது போக்காக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பாரியளவில் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் சர்வதேச பொலிஸ் மாநாடு
சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
வெளிநாடு செல்ல திறைசேரியின் அனுமதியை பெற வேண்டும்
-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு – கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது, திறைச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் அண்மையில் ரஷ்யாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தனர். இதற்காக கோடிக்கணக்கான நிதி விரயம் செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் குறித்த பயணம் ஜனாதிபதியினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே திறைசேரியின் அனுமதிக்கான உத்தரவையும் ஜனாதிபதி…
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா இலங்கையை வந்தடைந்தார்!
இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையை வந்தடைந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், மேலும் பல முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்திக்கவுள்ளார். அத்துடன்,…
சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளது!
சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 15 % வற் வரி சேர்க்கப்பட்டதால் சிகரெட் ஒன்றிற்கான விலை ரூ.5 இனால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 35 ரூபாவாக இருந்த சிகரெட் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்ககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபா முதல் 50 ரூபா வரையில் சிகரெட் ஒன்றின் விலை நிர்ணயிக்கப்படலாம் என…
முதலீட்டாளர்களை தேடுகிறது அரசு
கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள புனரமைத்து ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில் கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. ‘பரந்தன் இரசாயன கூட்டுதாபனம்’ என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கி வந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட வேண்டுமெனவும், தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது. தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும்…
திஸ்ஸவுக்கு நோட்டீஸ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தில்லையடி ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வு
தில்லையடி பிரதேசத்தில் உள்ள ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வொன்று பெற்றோருக்கு (25.9.2016) இடம் பெற்றது. வளவாளர்களாக ஆசிரியர் அஸ்லம், சமூக ஆர்வலர் முஜாஹித் நிஸார் ஆகியோர் செயற்பட்டனர்.
மைத்திரி இன்று, நாடு திரும்புகிறார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 18ம் திகதி அமெரிக்க புறப்பட்டுச் சென்றிருந்தார். ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கயிருந்த காலத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை…
