Headlines

விமல் வீரவன்ஸ FCID இல் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக வீரவன்ஸ இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதியும் விமல் வீரவன்ஸ பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

Read More

இருதய நோயாளர்களுடன் விளையாடும் ஊழியர்கள்

இருதய சத்திரசிகிச்சைகளுக்கு உதவும் தெரபிஸ்ட் என்ற சிகிச்சையாளர்கள் நாளை (25) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர். இதன் காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர சத்திரகிசிச்சைகளில் தமது தொழில்சங்கத்தினர் ஈடுபடுவர் என்று தெரபிஸ்ட் சிகிச்சையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 10 பேர் இருதய சத்திர சிகிச்சைகளுக்காக தம்மை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பலமான கடவுச்சீட்டு கொண்ட, நாடாக இலங்கை

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த…

Read More

லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்படுகிறது!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலமானது நாளை இவ்வாறு தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30  மணிக்கு இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது பொரளை கனத்தையில் உள்ள…

Read More

மஹிந்தானந்தவின் மகன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கனிஷ்க பண்டார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

தலைமை பதவியிலிருந்து விலகினார் ஓமல்பே சோபித தேரர்

ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். நேற்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13 ஆவது கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் புதிய இணைத்தலைவர்களாக வண. ஹெட்டிகல விமலசார தேரர் மற்றும் பிரதியமைச்சர் கருணாசேன பரணவிதாரண நியமக்கப்பட்டுள்ளார். மேலும்  பொதுச்செயளாளராக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்

அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் மாதத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு, புதிய அரசியல் அமைப்பு குறித்த ஆரம்பக் கொள்கைகள் அனைத்து குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்படி, இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய…

Read More

வற்வரி முறைமை அவசியம் வருமான அதிகரிப்பும் தேவை

அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர்…

Read More

ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் குறித்து பிரிட்டனும் இலங்கையும் ஆராய்வு

ஜெனிவா மனித உரிமை பேரவையில்  கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள்   தொடர்பில்   இலங்கை அரசாங்கமும்  பிரிட்டன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்  பிரிட்டன்   பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும்   இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல்  தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.    இந்த சந்திப்பையடுத்து  தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை…

Read More

சேலை அணியத் தேவையில்லை

தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ஜேர்மனிலிருந்து தருவிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்ட லசந்த, தாஜுடீன்

சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஸ்பிரிங் ஒன்றினால் வெளியாகும் தோட்டாவை கொண்ட சத்தம் வெளியிடப்படாத துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொலை தொடர்பில் காணப்பட்ட இருவேறு மருத்துவ கருத்து தொடர்பில் உண்மை தகவலை பெற்றுக் கொள்வதற்காக லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும்…

Read More

இணக்கம் காணப்பட்ட சதுர சேனாநாயக்கவிற்கு எதிரான வழக்கு!

நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சரின் மகனுமான சதுர சேனாநாயக்கவிற்கும் ராகம பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான வழக்கு இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த ராகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை திட்டி அச்சுறுத்தியதாக சதுர மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினரும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள இணங்கியிருந்தனர். இரு தரப்பினரதும் ஒப்புதலின் அடிப்படையில் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக நீர்கொழும்பு பிரதான நீதவான் ருசிர வெலிவத்த தெரிவித்துள்ளார்….

Read More