Main News
20 கழகங்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
கிண்ணியாவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உபகரணங்களை மீள்குடியேற்ற செயலணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 50000 ரூபா பெறுமதியான சுமார் 20 கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன .10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஆரம்ப கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன தொடர்ந்தும் அடுத்தடுத்த…
இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும் சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார். சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தாராபுரம் அல் மினார் வித்தியாலயத்தில் இன்று மாலை (06) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சீன தூதுவர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…
விகாராதிபதியுடனான நல்லிணக்க சந்திப்பு!!!
திருகோணமலை மாவட்டம் மொறவெவ கஜபா விகாராதிபதியும் கிழக்கு மாகாண விகாராதிபதி சங்க பிரதான விகாராதிபதியுமான களுத்துரை சோமரட்ண அவர்கள் சிநேகபூர்வமான சந்திப்பில் ஈடுபட்டார். குறித்த சந்திப்பானது இன்று (06) கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்கச் சந்திப்பில் ஈடுபட்ட விகாராதிபதி பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான எம்.பி.எம்.முஸ்தபா, எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் ஆகியோர்களுடன் பரஸ்பர விடயங்கள் தொடர்பிலும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு- அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம், ஆளுநருடனும் பேச தீர்மானம்
சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச செயலாளர் வசந்த குமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இன்றைய மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும்…
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை!!!
அரசாங்கம் முன் வைத்துள்ள வரவு செலவு திட்டம் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இருந்த போதும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாத்தாத்திற்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2019…
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான விஜயம்.
கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் Holly Cross தேவாலயம், Holly Cross வித்தியாலயம் மற்றும் வீதி புனரமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது இப்பிரதேசத்தில் அபிவிருத்தி சார்ந்த வேலைகளை செய்ய தயாராக உள்ளதாகவும் இதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பேசப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு கம்பரெலிய நிதி ஒதுக்கீடில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கீழுள்ள…
25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன்!!!
25 வருடகாலமாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு இடையூறு வழங்குவதாகவும் அங்கிருந்து வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கைத்தொழில் வாணிபம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட…
“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!
கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள கல்லூரிகளில் இன்றைய தினம் 200 பாடசாலை கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது பாராட்டத்தக்க விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவந்த புலவு ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடி ஆரம்ப கற்றல் வள நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றிய…
விஸ்தரிக்கப்பட்ட திருகோணமலை சதொச கிளை திறந்து வைப்பு!!!
துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை என்.சீ வீதியில் குறித்த சதொச விற்பனை நிலையம் இன்று (01) பிராந்திய முகாமையாளர் ஜே.நிர்மலன் பெர்ணான்டோ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 408 கிளைகளில் இக் கிளையும் ஒன்றாக காணப்படுகிறது. வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை குடியேற்றுதல், கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும்…
“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த திட்டங்கள் ! அமைச்சர் ரிஷாட் வவுனியாவில் தெரிவிப்பு..
கிட்டத்தட்ட 10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம் நல்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2000 புதிய ஏற்று மதியாளர்களை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சர்வதேச வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக்சமரவீர பிரதம விருந்தினராக…
பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருகோணமலை ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கான புதிய கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது!!!
பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில் இடம் பெற்ற புதிய ஆய்வு கூடத்தை இன்று (01) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் கலாசார ரீதியாக உற்சாக வரவேற்பளித்தார்கள். கல்வி அமைச்சின் “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டம் 2016-2020 திட்டத்தின் கீழ் குறித்த ஒரு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட…
சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!!!
குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது. இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்ததை திறந்து வைத்தார். இதன் போது, பாடசாலையின் அதிபர் எல் எஸ் யமீனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச்…
