Headlines

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் முஸ்தாக் தலைமையில் இடம் பெற்றது. கலை இளமானி பட்டம், டிப்ளோமாதாரிகள், முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்தோர்களுக்கான பட்டங்களே வழங்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் தலைவரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்….

Read More

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர்  ரிஷாத் 

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை இன்று (16 ) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்….

Read More

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று முதல் நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் விழிப்புணர்வு செயற்பாடுகள் – அமைச்சர் ரிஷாத் ஆலோசனை

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட் டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர். எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெறும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டாக்டர். லலித் செனவீர தெரிவித்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டங்கள் தோறும் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும்…

Read More

மையவாடி பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் . S.M.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிப்பு.

மையவாடி பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph.D) அவர்கள் தெரிவிப்பு. இதற்கான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் இடம்பெற்றது. எதிர்வரும் தினங்களில் எமது பிரதேசத்தில் காணப்படும் மையவாடி பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கான செயற்திட்ட அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தவகையில் தைக்கா பள்ளிவாசல், கயர் பள்ளிவாசல், சலாம் பள்ளிவாசல், முஅல்லா பள்ளிவாசல், அழ்பர் பள்ளிவாசல் நிர்வாக தலைவர்கள், செயலாளர்கள்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் திருகோணமலை நகராக்க திட்டம் தொடர்பில் மாநாடு!!!

திருகோணமலை நகராக்க அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை ஜேஹப் பீச் விடுதியில் இடம் பெற்றது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.நகர அபிவிருத்தி தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது . 2050 ம் ஆண்டளவில்  திருகோணமலை அபிவிருத்தியில் நகராக்கம் எப்படி இருக்குமென பல தரப்பட்ட விரிவுரைகள் “மெகா மைன்ட்ஸ்” எனும்  தொனிப் பொருளில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு துறை முகங்கள்…

Read More

ஐந்து மில்லியன் டொலரில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி -இளைஞர்களுக்கும் வாய்ப்பு நகர திட்டமிடல் கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் தெரிவிப்பு!!!

திருகோணமலை துறை முகம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்காவின் நிதி உதவியூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய நகராக்க திட்டத்துக்கும் வழி வகுக்கும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில்  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து கொண்ட  நகராக்க அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் இன்று…

Read More

வவுனியாவில் , சூரிய மின்கலத்தொகுதி  திறந்து வைப்பு- அமைசர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு!!!

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து நாளாந்தம் ஏழு ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும். பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் 200 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி சபைக்கான கட்டிட அங்குரார்ப்பணமும், நடமாடும் சேவையும்!!!

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வு இன்று (14) திருகோணமலையில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட பங்கேற்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாட்டில் இடம் பெற்றது. திருகோணமலை கரையோரத்தில் மரநடுகை திட்டம், 200  மில்லியன் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்வாகக் கட்டிடமும் சுற்றுலா விடுதிக்குமான…

Read More

சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் பிரதேசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

மன்னார் பிரதேச சபையின் 12வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரையில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் முஜாஹிர் அவர்களினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்களின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 21சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன்  உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த முசலி பிரதேசத்தில் 32…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்…

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை இலங்கை துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதான ஆகியோர்கள் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று (13) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. துறை முக ஊழியர்கள் சார் பிரச்சினைகள், துறை முக அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. குறித்த சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச்…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் முயற்சியால் கொழும்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக்கட்டிடம்!

கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை  அதிபர் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. ரூபா 80…

Read More

அரச நெற்களஞ்சியங்களின் நெற்கொள்வனவுகள் அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமென பேராசிரியர். எஸ் . எம். எம். இஸ்மாயில் எம்.பி தெரிவிப்பு!!!

அம்பாரை மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் “சேனாபுழுக்களின் ” பாதிப்பினால் பாதிப்படைந்துள்ள அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இன்று அம்பாரை மாவட்ட கச்சேரியில் மாவட்ட செயலாளர் D.M.L பண்டார அவர்களின் தலைமையில் விவசாய , கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கௌரவ. அமைச்சர் ஹரிஸன் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய நமது பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எஸ் . எம். எம். இஸ்மாயில்…

Read More