Headlines

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சு: பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு!!!

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை (12) பாராளுமன்ற கட்டட தொகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள் உள்ளடங்கிய புத்தளம் கிளீன் அமைப்பினரும் புத்தளம் மக்களின் சார்பாக கலந்து…

Read More

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்த மக்கள் காங்கிரசின் தம்பலகாம மத்திய குழுவினர்!!!

திருகோணமலை மாவட்ட தம்டலகாமம் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்    இடம் பெற்றது. மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள். விவசாய நன்னீர் மீன்பிடி…

Read More

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்; பின் புறப்பகுதி முற்றாக சேதம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2:30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன. சம்பவத்தை அறிந்து இன்று காலை போலீசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பாயிஸிடமிருந்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர். அரசியல்…

Read More

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!!!துயரத்திலுள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல் -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டம் மூலம் மேற்கொண்டுள்ள தீர்மானம் துயரத்தில் உள்ள அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை 6000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதனை ஆரம்பமாக வைத்து அத்தொகையை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேவேளை, வீதிகளிலும் வெய்யிலிலும் போராட்டம் நடத்தும் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு…

Read More

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென  பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும்  திண்மக்கழிவகற்றல் திட்டம் தொடர்பான விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  அமைச்சர் ரிஷாட்  அறுவைக்காட்டு குப்பை திட்டத்திற்கு தமது கட்சி …

Read More

கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்

கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (10)   பாடசாலை வளாக  மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. பாடசாலை அதிபர் கே.எம்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர்  அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். குறித்த நிகழ்வின் போது பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடனும் பாரம்பரிய தற்காப்பு கலையுடனும்  பெரும் அமோக வரவேற்பளித்தார்கள். சபா,மினா,மர்வா என  மூன்று  இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தது….

Read More

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் எம்.பி அவர்களினால் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கல்வியறிவோடு உடற்கல்வியும் மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும். ஏனெனில் விளையாட்டுகள் சிறந்த மானிடப்பண்புகளை வளர்க்கின்றது. தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பனவற்றை கூறமுடியும். இந்த தருணத்தில் எமது பிரதேச விளையாட்டு கழகங்களை மேம்படுத்தவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு உறுதுணையாகவும் செயற்பட்டார். எமது மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் எம். பி. கடந்த 2018ம் ஆண்டில் கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுத்தீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் புத்தள மாவட்ட…

Read More

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இனங்காணப்பட்டவர்களுக்கான பல்வேறு உதவிகளாக பல சமூக உதவிகள் தென்ஆபிரிக்காவில் இயங்கும் அல் இமாட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கிண்ணியா அல் அதான் பாடசாலையில் இன்று (10) ஞாயிற்றுக் கிழமை அல் ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் அஷ்ஷெய்க் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா தலைமையில் இடம் பெற்றது. தென் ஆபிரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அல் இமாட் அமைப்பின் நிதி…

Read More

எதிர்வரும் தேர்தலில் அ.இ.ம.காவினூடாகப் போட்டியிடுவேன் -கலாநிதி ஜெமீல்

கடந்த 09.03.2019ம் திகதி சனிக்கிழமை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற இலவச மின்சார மற்றும் குடிநீர் வழங்கும் செயற்றிட்டம் – 2019 நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் கலந்து கொண்டிருந்தார். சுமார் ஒரு வருட காலமாக நேரடி அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமலிருந்த ஜெமீல், இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் பேச்சுக்களனைத்தும், அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெதிராகவும், தனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான்…

Read More

அமைதியானதும் நிம்மதியானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களின் பங்களிப்பு அவசியம் -மகளிர் தின வொழ்த்துச் செய்தியில் ,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி.

பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.அத்தகைய பெண்களின் முழுமையான பங்களிப்பினூடாகவே ஒருபிரதேசத்தினதும் ழுமுநாட்டினதும் அமைதியும் நிம்மதியுமான சூழல் தங்கியுள்ளது. இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தையெபாட்டி கிராமிய பொருளதார விவாசாய நீர்பாசன ,இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில்–ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது அன்று முதல் இன்று வரை யதார்த்தபூர்வமாக உளவாங்கிக் கொள்ளும தத்துவமாகும். ,இன்றைய சவால்கள் நிறைந்த நவீன யுகத்தில் உலக ,யந்திரம் சமாதானமாக சுழல் பெண்களின் செயலாற்றுகைகள் அவசியமாகின்றன.பெண்கள் எல்லாவகையான…

Read More

மூதூர் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மத்திய குழுவினர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்தனர்!!!

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று வியாழக்கிழமை இரவு  பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து…

Read More

முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !

மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்   வெளி மாவட்டங்களை சார்ந்தோர்  மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்த ஆலோசனைக்கிணங்க   முசலி மீளாய்வு கூட்டத்தில் அதற்கான ஏகமானதான   தீர்மானம் எடுக்கப்பட்டது. முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டம் இன்று காலை (06) பிரதேச செயலாளர் வசந்த குமாரவின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்ற போது, உள்ளூர் பிரதேசங்களில் வீடுகளை கட்டுவதற்கென  மண் எடுப்பதற்கு  அதிகாரிகளும் பொலிஸாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள்  என்றும்…

Read More