Main News
பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து தூதுவர் மன்னாருக்கு விஜயம்
இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும் வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று (05) தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். மன்னாருக்கு அமைச்சருடன் விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட் ஷகீல் ஹூஸைன் மன்னார் புதுக்குடியிருப்பில் தனது நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு…
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளை ஜெனீவாவில் அங்குரார்ப்பணம்
ஐரோப்பாவின் சுவிட்ஸர்லாந்து ஜெனீவா நகருக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளை நேற்று முன்தினம் (03) ஜெனீவாவில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியின் இணைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன் தலைமையில், பிரான்ஸ் கிளையின் தலைவர் இஸ்ஸத் ரஹ்மான், பிரான்ஸ் கிளையின் உபதலைவர் ஸுஹீல் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் ஜெனீவாக் கிளையின் தலைவராக சகோதரர் ஸஜாத் அவர்களும், அமைப்பாளராக ஜிப்ரி அவர்களும் மற்றும் 11 பேரை உள்ளடக்கிய…
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் அரசும்: அதனை எதிர்க்கும் முஸ்லிம்களின் ஊர்வலமும்
04.11.2016 நேற்று (03.11.2016) கொழும்பில் இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்காதே” என்ற போராட்ட ஊர்வலம் முஸ்லிம் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையும் கோஷமும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களாலும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதனை ஏற்பாடு செய்தவர்கள் யாரென்பதை விடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளாக அமைந்த “முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடாதே” என்ற விடயமே இங்கு நோக்கத் தக்கதாகும். எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில், விசேடமாக…
சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது!
சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது! ஜெனீவா உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிசாத்… -சுஐப் எம்.காசிம் – இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய அடைவு மட்டத்தை அடைவதே எமது குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக…
குலைக்கும் நாய் கடிக்காது….. ஞானசார (வீடியோ)
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடித்து துரத்துவோம் என்று கூக்குரலிட்ட ஞானசார தேரரின் ஆட்கள் மொத்தம் இருபதுக்குக் குறைந்த ஒரு மத குருவும் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை டேக்னிகள் சந்திவரை, சோர்வாகவும், களைப்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல சிங்கள மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காததால்மேலும் வெறும் 20 இற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாலும் விரக்தியடைந்து கெட்ட தூசனத்துடனும், வார்த்தைகளை வெளியிட்டு கொண்டு அங்கிருந்து களைந்து சென்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐரோப்பிய கிளை இன்று அங்குரார்ப்பணம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய நாட்டுக்கான கிளை ஒன்று இன்று 03/11/2016 வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த கிளையினை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றார். இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒழுங்கினை ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன்…
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் (வீடியோ)
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்திய ஊடகங்களில் வெளியான செய்தி…
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்க, கைகோர்த்துள்ள சக்திகள் – ஏ.எம்.எம்.முஸம்மில்
“அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா கருத்து தெரிவித்திருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் ஜி எஸ் பி ப்ளஸ்சை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் , மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருமான ஏ எம்…
ஜெனீவாவில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை
சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்ற தூதுக்குழுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன்அவர்கள் தலைமையேற்று உரையாற்றியபோது…
முஸ்லிம் தனியார் சட்டமும்; பிறர் தலையீடும்; உரிமைப் போராட்டமும்!
03.11.2016 இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது. அதன்பின், சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் மார்க்க மற்றும் அரசியல் அறிஞர்களை கொண்ட சபை மூலம் பரிந்துக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு வலுவூட்டப்பட்ட சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது எமது முன்னோர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளில் ஒன்றாகும்….
அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி
01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக இருந்து பெரும்…
அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே இதனை சாதிக்க முடியுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அனுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் உதவியின் மூலம் புத்தளத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இஷாக் எம்.பி உரையாற்றினார். 1947 – 1989 ஆம்…
