Headlines

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழா

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி. பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ரப், இஸ்மா லெப்பை, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜுனைட், உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபையிர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.மஹ்றுப் தலைமையில் இடம்பெற்றது.

Read More

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான துரைரட்ணம் , வெள்ளிமலை , சபையிர் பிரதேச செயலாளர் திரு உதயஸ்ரீ மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்களாதேஷ் அமைச்சர் டொஃபைல் அஹமட் பங்கேற்பு

பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்களாதேஷ் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் டொஃபைல் அஹமட்டும் பங்கேற்று நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சு மட்டத்திலான…

Read More

வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு

07.11.2016ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Read More

வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

நிலப்பகுதிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்லடிவெலி வாவி மற்றும் அதனே சூழவுள்ள விவசாய நிலப்பகுதிகளை இன்று (07.11.2016)பார்வையிட்டார். இதன் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தொடர்ச்சியாக நீர்ப்பாசன நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் மேட்டு நில பயிர்செய்கையாளரின் நீண்ட நாள் தேவையினை நிவர்த்திக்கும் முகமாக நீர்ப்பாசன வாய்க்காலினை புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் போரதீவுப்பற்று…

Read More

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , சாணக்கியன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் வில்வரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளையடுத்து இஷாக், ஷாபி நிக்கவெரட்டிய பள்ளிவாசலுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிவு!       

குருநாகல், நிக்கவெரட்டிய டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்வி, கலாச்சார பணிப்பாளருமான டாக்டர்.ஷாபி ஆகியோர் இன்று நண்பகல் {07/11/2016} அங்கு சென்று பள்ளிவாசல் முக்கியஸ்தர்களைச் சந்தித்து  நிலைமைகளை நேரில் கேட்டறிந்தனர். பள்ளிவாசல் தலைவர் கே.எம்.எம்.ஹமீத் மற்றும் நிருவாக சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து,…

Read More

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத  வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்?

புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “வன்னி விடியல்” அமைப்பினால் நாடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் கெளரவ அதிதிகளாக…

Read More

களுவாஞ்சிக்குடி, திரு முருகன் வீதியின் வேலைகள் ஆரம்பித்து வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் (பத்து லட்சம் ) மூலம் களுவாஞ்சிக்குடி திரு முருகன் வீதியின் வேலையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபால ரட்ணம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையிலான குழு பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்திப்பு

ஒட்டமாவடி தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சந்தித்து பாடசாலையின் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அன்மாயில்  கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற பிரதி அமைச்சர், அடுத்த வருடம் எனது நிதி ஒதுக்கீட்டு மூலம் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

பாகிஸ்தான் தூதுவர் மன்னார் விஜயம் (வீடியோ காட்சி)

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கையின் வடபகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மன்னாரில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிட பாகிஸ்தான் தூதுவர் மன்னார் விஜயம் செய்த வீடியோ காட்சி.

Read More