Headlines

சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே  முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் சைட் ஹோட்டலில் தஜிகிஸ்தான் – இலங்கை வர்த்தக உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான், தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அஸ்லோவ் சிரோஜிடின், தஜிகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ஹிக்மதுல்லோசோடா நெமதுல்லோ, இலங்கைக்கான தஜிகிஸ்தான் தூதுவர்…

Read More

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி. புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு புத்தளம் மாவட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம். எச் . எம் நவவியை நியமித்து, சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை மிகவும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியை அமைச்சர் பதவி விலகச்…

Read More

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்முதலாம் நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது- அமைச்சர் றிஷாத் (audio)

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.   audio

Read More

“நாம் இறைவனை நம்புகின்றவர்கள், ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். நாம் இறைவனை நம்புகின்றவர்கள் ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

கடும்போக்கு பிக்குகளை கட்டுப்படுத்துங்கள்: 21 முஸ்லிம் MPகள் கையொப்பமிட்ட மனு ஜனாதிபதியிடம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 9A சித்திகளைப் பெற்ற 195 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வும் “முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின்” ஏற்பாட்டில் கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அமைச்சர் றிஷாத்  கொண்ட கலந்து கொண்டபோது.

Read More

இஸ்லாத்திற்கெதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள் இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம்

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில் அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதை புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இந் நாட்டையும் நம் தேச மக்களையும் ஈமானுக்கு ஒட்டிய விதத்தில் நேசிக்கிறோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்….

Read More