Main News
ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்களை அமைச்சர் றிஷாத் சந்திப்பு
கொழும்புப் பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், நேற்று (10) பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைச்சர் றிஷாத் சந்தித்து கலந்துரையாடியபோது.
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் சூடுபிடுத்த ஞானசார தேரர் விவகாரம்
ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான்…
ஜெயலலிதா மறைவு; இந்திய உயர்ஸ்தானிக அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்து
தமிழ் நாட்டின் முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மறைவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்திட்டபோது.
“மீளக்குடியேறிய மன்னார் முஸ்லிம்களே வில்பத்துவை பாதுகாக்கின்றனர்” அமைச்சர் றிஷாத்
மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் வனவளத்திணைக்களத்தினால் 2012இல் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனவளத்துக்குரியதாக பிரகடனப்படுத்தப்பட்டமை மிக மோசமான நடவடிக்கை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வில்பத்துதொடர்பாக எங்கள் மீது அபாண்டங்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது. வில்பத்து…
முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)
முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றினார். அமைச்சர் றிஷாத் பேசியவை பின்வருமாறு. “இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகின்ற மதத்தை பின்பற்றவும், மத கடமைகளை நிறைவேற்றவும் அணுமதிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளும் இன வாத அமைப்புகளுக்கும் சோரம் போகும் வகையில் தெஹிவலை பள்ளிவிடயத்தில் நடத்துகொண்டமையையிட்டு மிகவும் கவலையடைந்ததுடன் இந்த தெஹிவல பள்ளி மற்றும் மத்ரஸா சட்ட பூர்வமாக நிர்மாணிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் ஹன்ஷாட்டில் இனைக்கும்படி வேண்டிக்கொள்கின்றேன்.” “ஒரு சில இனவாதம்…
“ஞானசாரர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” – அமைச்சர் றிஷாத் கேள்வி
சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதும் இற்றைவரை அவர் ஏன் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ’வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என முஸ்லிம்களாகிய…
சிறுபான்மையை அடக்கியாள்வதில் பேரினக்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன
பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் இருக்கும் சில வேற்றுமைகளால் முட்டி மோதிக் கொண்டிருந்த போதும், அந்தக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பல அரசியல்வாதிகள் சிறுபான்மைச் சமுகங்களை அடக்கி ஆள்வதில் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதின் தெரிவித்தார். குருநாகல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் மக்கள் காங்கிரசின் கல்விக் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் ரிஷாத் பதியுதீன் பவுன்டேசன் அனுசரணையில் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத்…
இலங்கையில் சுற்றுலா மேலாண்மை அங்கீகாரம் முதன் முறையாக வெளியிடப்பட்டது!
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறை மேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம்‘சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்திற்கே‘ வழங்கப்பட்டது இவ் அங்கீகாரத்திற்கான அங்குரார்ப்பண அமர்வானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் மற்றும் அதன் தகுதியினை பெற்ற சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதிமற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்தின் தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது….
“ஹிஜாப், பர்தா அணிவதில் எவ்வித தடையும் இல்லை” – அரசாங்கம் அறிவிப்பு!
முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை. அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். அத்துடன் ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முள்ளி பொத்தானை சிங்கள…
“பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுங்கள்”- அமைச்சர் றிஷாத்
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் த்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவ முடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரவு…
பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல் (வீடியோ)
கலவரத்தில் சொத்துக்களை இழந்த முஸ்லீம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை – பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல்.
“சமுர்த்தி வங்கிகளில் ஷரீஆவை அறிமுகம் செய்யுங்கள்” – அமைச்சர் றிஷாத்
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலநோம்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது. கடந்த காலங்களில் சமுர்த்தித் திட்டம் இலங்கைகு அறிமுகப்படுத்தப்பட்ட போது அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற் கொண்ட அமைச்சர் எஸ். பி திஸநாயகா தற்போதும் பொருத்தமான அமைச்சுப் பதவி…
