Main News
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் பாதைகள் புனரமைப்பு
கொல்லன்குட்டிகம மக்களின் பாதைகள் சேதமடைந்து மிகவும் சிரமப்பட்டு வந்த நீண்டகால பிரச்சினையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவரும் அனுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி
புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.. கட்டிட நிர்மாண வேலைகளை பாராளுமன்ற…
தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி மாக்கந்துறை இன்கியுபேட்டர் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
தேசிய சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர மத்திய நிலையம் அங்குரர்ப்பண விழாவில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…
நவவி எம் பி முயற்சியால் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்படும் அலுவலக கட்டிட வேலைகளை பார்வையிட்டபோது
பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூன்று மாடி அலுவலக கட்டிடத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.. குறித்த வேலைகளை பார்வையிடுவதற்காகவும், பாடசாலை அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் சாஹிரா தேசிய பாடசாலைக்கு விஜயம்…
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட தட்சனாமருதமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். மடு பிரதேச செயலாளர் எப் பி சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, உள்நாட்டு…
தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…
தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…
மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும். மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’ வேலைத்திட்ட ஜனாதிபதி நடமாடும் சேவை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு…
நிலமெகவர தேசிய வேலைத்திட்டம் இன்று மன்னாரில்.. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெகவர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று (09) மன்னார் மாவட்டத்தில் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் பிரதேச செயலாளர் பரமதாஸ், முப்படை உயர் அதிகரிகள்,…
அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் குருணாகலில் மினி ஆடைத்தொழிற்சாலை
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற போது குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ…
காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர்…
மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மீண்டும் எதிர்வரும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜனாதிபதியினை ஜூலை மாதம் சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் முசலி பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி குழு…
கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…
