Main News
முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!
புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் கட்சியின் முதளைப்பாளி அமைப்பாளர் தௌபீக்,…
புத்தளம், முதளைப்பாளி, அல்-மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா!
புத்தளம், முதளைப்பாளி, அல் – மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா, இன்று வெள்ளிக்கிழமை (23) முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் Z.A.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.T.M.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் மௌலவி…
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் புத்தளம் விஜயம்!
புத்தளம், திகழி பிரதேசத்திற்கு இன்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹிரின் இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்ககள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
VIDEO-‘முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் விசனம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் காணப்பட்டாலும் என்றாவது ஒருநாள் மீள் எழுச்சிபெறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்கள். ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கில் செயற்படுவதை சுட்டிக்காட்ட வேண்டிய…
UTV கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா!
நாடளாவிய ரீதியில், UTV நடாத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை (17) மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், அரசியல் அதிகார சபை உறுப்பினர் Dr. ஹில்மி மொஹிடீன், மூதூர் பிரதேச…
புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலை விடுகை விழா!
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா இன்று (17) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இதன்போது, கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர், வவுனியா மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜுனைட் மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றஹீம், விவாகப் பதிவாளர் ஜவாஹிர் மற்றும்…
சாளம்பைக்குளம் அல்/அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
இன்றையதினம் (17) வவுனியா மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சாளம்பைக்குளம், அல் – அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சந்திப்பு!
இன்றைய தினம் (16) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முள்ளியவளை, ஹிஜ்ராபுரம் மற்றும் நீராவிப்பிட்டி பிரதேச வாழ் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மன்னார் மாவட்டத்தின் 2024ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்வு!
மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 9.30 மணிக்கு, மன்னார் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த அபிவிருத்தி குழுக்…
அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா – தலைவர் ரிஷாட் பங்கேற்பு!
அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா, பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் S.H.ஹம்சி ஹாஜியார் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், நிப்போன் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நிஸைஹர் ஹாஜியார், கட்டுகஸ்தொட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜீவ என்.வீரசுந்தர மற்றும் விஷேட பேச்சாளராக அஷ்ஷேக் அனஸ் மொஹமட் நளீமி…
புத்தளம், கரைத்தீவு ரிஷாட் பதியுதீன் (அல்-ரிதா) பாலர் பாடசாலையின் விடுகைவிழா!
புத்தளம், கரைத்தீவு ரிஷாட் பதியுதீன் (அல்-ரிதா) பாலர் பாடசாலையின் விடுகைவிழா, அதன் ஆசிரியை அஸ்மியா தலைமையில், இன்று சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் M.T.M. தாஹிர், முன்னாள் புத்தளம் நகர சபையின் பிரதித் தவிசாளர் A.O.அலிகான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசபந்து M.I.M.ஆசிக், கட்சியின் கரைத்தீவு அமைப்பாளர் M.T.M.இக்றாம்,…
வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா!
வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலய இணைப்பாளர் மனோகரன், மதவாச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சஜீத் பாத்திமா றிஸ்னா, அல் மதீனா GTMS பாடசாலையின் பிரதி அதிபர் றமீஸ், வவுனியா…
