Main News
முஸ்லிம்களை பிழையாக வழிநடத்தும் ஒரு மகா பொய்யனே ‘ஹிஸ்புல்லாஹ்’ – தவிசாளர் அமீர் அலி!
“ஹிஸ்புல்லாஹ், தான் எம்.பி.யாக வேண்டும் என்பதற்காக, எதையும் செய்யக் கூடிய ஒருவர்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஹிஸ்புல்லாஹ் நொந்து நூலாகிப்போன நேரத்தில், அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தோம். வெற்றி பெற்றதன் பின்னர், எங்களுக்குத் தெரியாமலே…
VIDEO-‘சலுகைகளுக்கு சோரம்போய் சொந்த தலைமைகளை இழந்துவிடாதீர்கள்’ – தலைவர் ரிஷாட்!
மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை என்ற போர்வையில் சமூகத்தின் காலைவாரிவிட சதி நடப்பதாகவும் தெரிவித்தார். மன்னார், முசலி – கொண்டச்சி பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,…
முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்;
விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்! முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு…
VIDEO- வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்;
மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- தலைவர் ரிஷாட் தெரிவிப்பு! அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர்…
VIDEO-“கட்சியிலிருந்து எவர் வெளியேறினாலும் திறமையாளர்களை அடையாளப்படுத்துவோம்” – கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்!
அப்துல்லாஹ் மஹ்ரூபின் கடந்தகால செயற்பாடுகளுக்கு நன்றி” திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப். எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து,…
(VIDEO) பாராளுமன்றத் தேர்தல் 2024 – மக்கள் காங்கிரஸ் 07 மாவட்டங்களில் போட்டி!
அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என தலைவர் ரிஷாட் உறுதி! மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்புமனுக்களை இக்கட்சி தாக்கல் செய்துள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகம் இம்முறை தேர்தலில் வெல்லப்படும் என்பதே மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பாகும். கடந்த பொதுத்தேர்தலிலும் இதே யுக்தியுடன் களமிறங்கிய அகில இலங்கை மக்கள்…
“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை வரவேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “அல்லாஹ்வின் அருட்கடாட்சம் கிடைக்கும் புனிதமிக்க பெறுமதியான ரமழான் எம்மை நெருங்கியுள்ளது. இம்மாதத்தில் நல்லமல்கள் செய்து புனிதவான்களாக மாறுவதற்கு முயற்சிப்போம். அல்லாஹ்வுடன் நேரடியாக அடியானை இணைக்கும் ஆத்மீக உணர்வே நோன்பு. நோன்பாளியின் பிரார்த்தனைகள் வீண்போவதில்லை. இன்னொரு…
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொன்டமான் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான MSS.அமீர் அலி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (04) ஆளுநர் அலலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப் பிரிவில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பாடசாலையில் காணப்படும் பௌதீக வளப்பற்றாக்குறை குறித்து தவிசாளர் அமீர் அலி எடுத்துரைத்தார். பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கூடிய விரைவில் அவற்றுக்கான தீர்வுகளைப்…
மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம் இன்றைய தினம் (03) முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.S.சுபைர் தலைமையில் ஏறாவூரில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி, பிரதி செயலாளர் நாயகம் M.A.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் M.A.M.தாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும் – பிரதம அதிதியாக தலைவர் ரிஷாட் பங்கேற்பு!
இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், ‘ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்’ எனும் நூல் அறிமுக நிகழ்வும் இன்று (03) மாளிகைக்காடு, பாபா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான சிரேஷ்ட ஒலி – ஒளிபரப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில், சர்வதேச புகழ் ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு!
புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக், இணைப்பாளர் இர்ஷாட், மர்சூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
சுமந்திரனின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய தலைவர் ரிஷாட் மற்றும் தவிசாளர் அமீர் அலி!
பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில், அவருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27) சுமந்திரன் எம்.பியின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார். இந்நிலையில், இன்று (28) மாலை தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரன் எம்.பியின் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள்,…
