Headlines

முதியவர்களுக்கு இனி ஆடம்பர பஸ்கள்!

முதியோர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆடம்பர வசதிகளுடன் கூடிய பஸ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு

விவசாய நடவடிக்கைகளுக்கான  செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு, வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே,சிறுவர்களது எதிர்காலம் மற்றும் அவர்களது உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், குடும்பத்தவர்களும், பொதுமக்களும் சிறுவர்களது…

Read More

மாணவனை தாக்கிய தந்தையை தேடி பொலிஸ் வலை வீச்சு

பாடசாலை ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மாணவன் ஒருவன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாத்தாண்டிய, கொட்டரமுல்ல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். நேற்று குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவனுடைய சகோதரி, ஆசிரியை ஒருவருடைய தொலைபேசியை எடுத்து…

Read More

ஹம்பாந்தோட்டை இளைஞனுக்கு பிணை

பொலிஸ் தடுப்பில் இருந்தபோது தப்பிச்சென்றிருந்த நிலையில் மீண்டும் கைதான,  ஹம்பாந்தோட்டை இளைஞனுக்கு, இன்று வெள்ளிக்கிழமை (30) பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்விளைஞனை மறைத்து வைத்திருந்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரையும், பிணையில் விடுவிக்க, ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன, இன்று உத்தரவிட்டார்.

Read More

சிறுவர் தின நிகழ்வுகள்

அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்டசிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்று (1) ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளைபெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களை மேற்படி தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், கற்றல் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையிலும் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள மிருககாட்சிசாலை மற்றும் விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று தாவரங்கள் தொடர்பாகவும், மிருகங்கள்…

Read More

இலங்கையில் 40 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய்!

இலங்­கையில் 20 வய­துக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில்  ஒரு­வ­ருக்கு மார்­பக புற்­றுநோய் ஏற்­படும் அபாயம்  இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக புற்­று நோய் சிகிச்சை நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்­நாட்டுப் பெண்­களில் நாளாந்தம் 6 – 7 பெண்கள் மார்பு புற்­றுநோய் கார­ண­மாக சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும்   வைத்­திய  நிபு­ணர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர். இதன்­படி  வரு­ட­மொன்­றுக்கு சுமார் 250 பெண்கள் மார்புப் புற்று நோயால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நாட்டில் புற்­று­நோயால் பாதிக் ­கப்­ப­டு­ப­வர்­களில் 25 சத வீதமானோர் மார்புப் புற்­று­நோயால் பாதிப்படைவ…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஷசி வீரவன்ச மீது வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்…

Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால்…

Read More

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

கண்டி – செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று  (29)நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More