Headlines

2500 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மனித வலு நிறுவனத்தினூடாக மின்சாரசபையில் சேவையாற்றும் 3700 பணியாளர்களில் 2500 பேருக்கு நிரந்த நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபையின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கமைய தகைமைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் ஏனையோரும் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

குவைத்தில் நிர்க்கதியான பணிப்பெண்கள் 83 பேர் நாடு திரும்பினர்!

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நேற்று(9) நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 83 பேர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் குவைத் நாட்டிற்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களையும் எதிர்நோக்கிய நிலையில், அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் தங்கியிருந்த குழுவினரே…

Read More

சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!

கொழும்பு – கிரான்பாஸ், மாதம்பிடிய பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இணைய வழி முறைப்பாடு விரைவில்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில், இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மையால் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிக்க மக்கள் பின்னிற்பதாகவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இணையத்தின் ஊடாக முறைப்பாட்டினை தெரிவிக்கும் செயல்திட்டமானது நடைமுறைப்படுத்தும் வரை பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 1954 என்ற…

Read More

சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டள்ளார். 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி 25 இலட்சம்  ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஊவா மாகாண சபை அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சமரவீர ஊவா மாகாண சபை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் 15 வருடங்கள் ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.

Read More

களுபோவில பேக்கரியில் தீ விபத்து

– எம்.எஸ்.எம்.சாஹிர் – களுபோவில, ஆசிரி வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் நேற்று மாலை 6.30 மணியளவில் (02.12.2015) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வேளையில் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் இருந்தவர்கள் விரைந்து செயற்பட்டதினால், பெரிதாகப் பரவ இருந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வந்த தீயணைப்புப் படையினர் முற்றாகத் தீயை அணைத்தனர். தீ ஏற்பட்ட வேளையில் வெதுப்பகத்தில் யாரும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வெதுப்பகம் தீப்பற்றி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் தீ ஏற்பட்டதுக்கான காரணம்…

Read More

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அழைப்பாணை

உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரூ அடுத்த வருடம் ஜனவரி 12ம் திகதி நீதிமன்றத்திற்கு முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணொருவரை தாக்கியது தொடர்பில் நீதியரசருக்கு எதிராக கல்கிஸ்ஸ காவற்துறைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இவ்வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

Read More

பொலிஸ் சீருடையைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும்

திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பர ஒளிப்பதிவுகளின் போது பொலிஸ் சீருடை பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கான அனுமதியை பொலிஸ் திணைக்களத்திடம் கோர வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். பொலிஸாரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரமொன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் இனிவரும் காலங்களில்…

Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பு டொரிங்டன் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல்  ஏற்றிச் சென்ற லொறி சாரதி ஒருவரிடம் 1500 ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More