Headlines

மின்சார சபை தலைவரின் இராஜினாமா கடித்ததை ஏற்க மறுப்பு

மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை உரிய அமைச்சர் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடையை பொறுப்பெற்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தனது பதவியை அநுர விஜயபால இராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனவே மின்சக்தி அமைச்சருக்கு குறித்த கடிதம் வழங்கிய போது அவர் அதனை மறுத்துள்ளார் தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, அந்த இராஜினாமா கடித்ததை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

கப்பம் கோரியே வானுடன் எரிப்பு!

தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு…

Read More

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது  தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாணின் விலை குறைப்பு

இன்று (14) தொடக்கம் ஒரு வாரத்திற்கு பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார். அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை…

Read More

மத்திய மாகாண ஆளுநர் காலமானார்

இலங்கையின் மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று (14) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 76 ஆகும். சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மஹிந்த நல்லவர்: ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார். இந்த அரசாங்கம் பல…

Read More

‘புபுது இந்திக்க’ கைது

பாதாள உலகத்தைச் சேர்ந்த இந்திக்க மல்லி என்ற புபுது இந்திக்க உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, றாகம மற்றும் ரன்தோலுகம ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

கெகிராவை வாகன விபத்தில் 9 வயது சிறுவன் பலி

கெகிராவ பல்லேவெதியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகன விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறியரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

அர் – றஹ்மா நலன்புரி சங்கத்தினால், சீருடை வழங்கும் நிகழ்வு

– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) – பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும்…

Read More

ஸக்காத் அமைப்புக்களுடனான சந்திப்பும், தகவல் திரட்டலும்

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸகாத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிராந்திய, பள்ளிவாசல் (கிராம) மட்டங்களில் ஸகாத் நிதிகளை  சேகரித்து அவற்றின்  மூலம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புக்களுடான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரதும் அனுபவங்களைப் பரிமாறி இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்ககான வழிமுறைகளைக் கண்டறிய இவ்வுபகுழு உத்தேசித்துள்ளது. இச்சந்திப்பிற்கு நாடாளாவிய…

Read More

ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலணி

கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து நியாயம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட…

Read More

நல்லாட்சி அரசாங்கம் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளது!

நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தேசிய ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகள் 48 பேரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது. யானைக்…

Read More