Headlines

தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?

தெமட்­ட­க்கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே தெமட்­ட­க்கொட சமிந்த உள்­ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை சந்­தேக நபர்­களை ஏற்றிச்சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் போது, துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய சந்­தேக நபர்கள் தரப்­பிலும் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிறைச் சாலை பஸ் வண்­டியில் பய­ணித்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நடத்­திய பதில் தாக்­கு­தலில், தாக்­குதல் நடத்த மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். துப்­பாக்கிச்…

Read More

வலது காலுக்கு பதில் இடது காலில் சத்திரசிகிச்சை

வலது கால் முழங்காலுக்கு சிகிச்சை பெற பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியின் இடது காலுக்கு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக மாணவியின் தந்தை பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிலிமதலாவை விஜயதுங்க மாவத்தையில் வசிக்கும் ஒன்பதாம் ஆண்டில் கல்விபயிலும் குறித்த மாணவிக்கு சிறு வயது முதல் வலது முழங்காலில் சிறு கட்டி ஒன்று காணப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுகொள்வதற்காக கடந்த 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் 16ஆம் வாட்டில் தனது மகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தந்தை,…

Read More

பஸ் விபத்து: மாணவன் காயம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது…

Read More

இலங்கையில் செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும், தராதரங்களுக்கும் உட்பட்ட வகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவு செய்யப்பட…

Read More

ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக…

Read More

எம்பிலிபிட்டிய இளைஞன் கொலை வழக்கு இன்று இடம் பெற்றது

எம்பிலிபிட்டிய இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்தியக்கடதாசி வாக்குமூலம் அல்லது நெருங்கிய உறவினரின் சாட்சியின் மூலமாக முன்வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (3) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சத்தியக்கடதாசி வாக்குமூலம் முன்வைக்கப்படும் வரை இந்த வழக்கை பிற்போடுவதாக நீதிபதி பிரசன்ன பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

Read More

31க்கு முதல் செய்தி வலைதளங்களை பதிவு செய்யவும்

இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று புதன்கிழமை (02) அறிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மேசனுக்கு 20 வருட சிறை

இளவயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேசனைக் குற்றவாளியாக இனங்கண்ட அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி, அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர், மேல் நீதிமன்றத்துக்கு வருகைதராமல், நீதிமன்றுக்குள் செல்வதைத் தவிர்த்து தப்பியோடிவிட்டார். இதுதொடர்பில், நீதிமன்ற பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அதன்பின்னர், குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில்…

Read More

க.பொ.த. சா.த பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம்…

Read More

நீதிவான் திலன பண்டாரவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு திலன பண்டாரவுக்கு விளக்கம்கோரிய கடிதத்தை நேற்று  (1) அனுப்பியுள்ளது. மொன்டிரோ ஜீப்பில் சரணாலயத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் சென்ற நீதிவான், அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை!

இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்தார். வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20 சதவீதமானோர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களே. எனவே,மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி…

Read More

இறக்குமதி வரியை அதிகரிக்க ஆலோசனை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More