Headlines

பாணின் விலை குறைப்பு




இன்று (14) தொடக்கம் ஒரு வாரத்திற்கு பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளது. D C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *