Headlines

கௌஷால் சில்வா வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

பயிற்­சியின்போது தலையில் பந்து அடிப்­பட்ட நிலையில்  வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Read More

வாக்காளர் இடாப்பில் திருத்தம்

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேர்தல்கள் அதிகாரிகளாக செயற்படும், கிராம சேவையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 25 மாவட்ட தேர்தல்கள் செயலகங்களையும் மையப்படுத்தி இந்த தெளிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் இடாப்புகளை மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி…

Read More

மொறட்டுவையில் விபத்து 24 பேர் படுகாயம்

மொறட்டுவ-கொரவெல்ல பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, சொகுசு பஸ், பாரவூர்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை, லுனுவில, பாணந்துறை வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை…

Read More

எம்.எச்.முஹம்மதின் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்

– ஊடகப் பிரிவு  –    மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையாளருமான முன்னாள் சபாநாயகர்  எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார். எம்.எச்.முஹம்மதின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில்…

Read More

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிய நபர்

மஹியங்கனை – சேனார பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியை முற்றுகையிட சென்ற சந்தர்ப்பத்தில் அதனை நடத்தி சென்ற சந்தேக நபர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், இந்த சட்டவிரோத மதுபான மோசடியை முற்றுகையிட சென்ற போதே இந்த சம்பவத்திற்கு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு,சந்தேக நபரை…

Read More

ஜேர்மன் நாட்டுப் பெண் பலி!

ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் (61) ஒருவர் இன்று (22) பகல் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த பெண் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் என ஹிக்கடுவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து பேச்சு

தனியார் மருத்­துவம், கல்வி மற்றும் தொலை­பே­சிக்­கட்­டணம் ஆகி­ய­வற்­றுக்­கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. எனவே தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளையும் அதி­க­ரிக்க நேரி­டுமா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­தாக தனியார் போக்­கு­வ­ரத்து சங்­கத்தின் தலைவர் கெமுனு விஜ­ய­ரத்ன தெரி­வித்தார். வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து கூறினார்.

Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெய்ட்ரீ தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 4அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட குறித்த சிறுத்தை புலி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுத்தை புலியை நல்லதண்ணி வன ஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More