Headlines

வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் – அக்குறணையில் சம்பவம் (படங்கள்)

Ash-Sheikh TM Mufaris Rashadi- நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது. நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது. அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்… நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து  பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்.. இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு…

Read More

யானை தாக்கி கிண்ணியா அப்துல் மஜீத் ரகீப் வபாத்

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப் (வயது 36) என்பவர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மேற்படி பிரதேசத்தில் உள்ள மணியரசன்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு 03 பேர் நேற்று (29) புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மேற்படி நபரை யானை தாக்கிய வேளையில் ஏனைய 02 பேரும் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எம்.எச்.முஹம்மதின் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்

– ஊடகப் பிரிவு  –    மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையாளருமான முன்னாள் சபாநாயகர்  எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார். எம்.எச்.முஹம்மதின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில்…

Read More

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் வபாத்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத் கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று (26) காலை காலமானார். 1921ம் ஆண்டு பிறந்த எம்.எச். முஹம்மத், 1956ம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினூடாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் கொழும்பு மேயர், பொரளைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் , சபாநாயகர் என்று பல பதவிகளை அலங்கரித்துள்ளார். கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ள அவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார…

Read More

பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் வபாத்

– ஜுனைட் எம்.பஹ்த் – இலங்கையின் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் (பீர் முஹம்மது புன்னியாமீன்) இன்று (10) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அண்மையில் சவூதி அரேபியா சென்றிருந்த இவர், இலங்கை திரும்பும் தறுவாயில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன். இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர்….

Read More

கட்டாரில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் வபாத்

கட்டாரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் என்பவர் உயிரிழந்துள்ளார். “Cuter pillar ” இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அது தவறி கடலுக்குள் வீழ்ந்ததில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் எனும் இளைஞரும் மற்றுமொரு இந்திய நபரும் பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இவர்களது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நல்லமல்கள் ஏற்கப்பட்டு சொர்க்கவாசிகளாக இவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Read More

முஹமட் சதாம் மலேசியாவில் வபாத்

மலேசியாவில் தொழில் புரிந்துவந்த கஹட்டோவிட்ட பகுதியை சேர்ந்த முஹமட் சதாம் எனும் 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக சற்றுமுன் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். தகவல்-A.K.முஹமட் கஹட்டோவிட்ட

Read More

அக்கரைப்பற்று, ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார். அக்கரைப்பற்று -11 ஆம் பரிவு (முறாவோடை) அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வெட்டப்பட்டிருந்த குழியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று 14 ,காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

Read More

யானை தாக்கி ஆசிரியர் இர்பான் வபாத்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார். நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மன்னார் கல்லாறு, ஏ.ஆர். ஜனூசியா இன்று வபாத்தானார்

– கரீம் ஏ. மிஸ்காத் – சென்றவாரம் மன்னார் கல்லாறு விபத்தில் காயமடைந்த ஏ.ஆர். ஜனூசியா.(27) இன்று காலமானார். இவர் பாயிஸ் ஆசிரியரின் மனைவியும், அப்னான் (வயது- 2 1/2), இன்பாஸ் (9- மாதம்) ஆகியோரின் தாயுமாவார். ஜனாஸா , இன்று மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, இன்று உளுக்காப்பள்ளம், கரம்பை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதேவேளை, மர்ஹும் ஜனூசியாவின் தாயும், பாயிஸ் ஆசிரியரும் யாழ்ப்பாணம் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாயிஸ் ஆசிரியரின் சம்ளப்பணத்தின்…

Read More

குவைத்தில் காலியை சேர்ந்த முகம்மத் அக்ரம் வபாத்

-குவைத்தில் இருந்து  அஸாம் – குவைத்தில் பாரத லங்கா இலங்கை உணவகத்தில் பணிபுரிந்த  முகம்மத் அக்ரம்  என்ற காலி பிரதேசத்தை  சேர்ந்த சகோதரர் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று 28/05/015 அஷர் தொழுகையின் பின் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன்……. தகவல் :MR.F .NASEER LANKA HOTEL FARWANAIYA CONTACT :69335656

Read More

சாலை விபத்தில் ஒருவர் பலி – பொத்துவிலில் சம்பவம்

சம்சுல் ஹுதா பொத்துவில் அறுகம்மை உல்லைப் பகுதியில் (19) இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று முந்திக் கொள்ள முற்பட்ட வேலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த பொத்துவில் – 05 சவாலை உல்லைப் பகுதியைச் சேரந்த முகம்மட் ஹனீபா அப்துல் றஹீம் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள் வந்த நபர் பலத்த…

Read More