Headlines

மட்டக்களப்பில் ரயில் விபத்து

மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து இடம்பெற்றது. குறித்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே விபத்துக்குள்ளானது. குறித்த ரயில்  புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், ரயில் இஞ்சின் மோதியதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார். இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன. இதன்போது, பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும்…

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்; மறைந்திருந்த ஒருவரை திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச்சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த…

Read More

அம்பாறையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின்…

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார். வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

Read More

ஏறாவூர் இரட்டைக் கொலை: நெருங்கிய உறவினர் கைது

மட்டு – ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது பலகை ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது…

Read More

மட்டக்களப்பு அபிவிருத்தி பணிகளின் முடக்கம் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் சடுதியாக முடக்கமடைந்துள்ளது. இதனால் துரித அபிவிருத்தியடைந்துவந்த மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவை அடைந்துள்ளது என பாராளுமன்றத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். காலநிலை சுற்றாடல் தொடர்பான விவாதத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். > அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், > எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்கள்…

Read More

கொலையாளிகளை கண்டு பிடிக்க நீங்களும் உதவலாம்!

கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று பொலிஸாரை குறை கூறி கொண்டிருக்காமல் தங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் அச்சமின்றி முன்வந்து பொலிஸாருக்கு வழங்குவதன் மூலம் விரைவாக குற்றவாளிகளை நீதி விசாரணையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும் என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் கடந்த ஞாயிற்று கிழமை படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளினது சடலங்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டதன்…

Read More

இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

திருமலைக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று திருகோணமலை பொலிஸ் தலையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கல்குடா சமூகமே உஷார்! ஷீஆக்களின் குர்பான் இறைச்சி!

ஸஹபாக்களை நேசிப்போர் ஒன்றியம் – கல்குடா என்று உரிமை கோறப்பட்டு கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் துன்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூகப்பணிகளின் பெயரில் கல்குடா முஸ்லிம்களிடம் இடம் பிடிக்க ஷீஆக்கள் பிரயத்தனம் கல்குடா சமூகமே உஷார்! நமது பிரதேசத்தில் ஷீஆ விஷ விதையை நட்டு, ‘தகிய்யா’ எனும் கபட நாடகத்துக்குள் பச்சோந்திகளாய் நடித்து, தமது வழிகெட்ட கொள்கைகளை பரப்பிவந்த ஷீஆக்கள், இன்று அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீவமரண போராட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஜம்மியதுல் உலமாவின்…

Read More

கலப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் நேற்று சனிக்கிழமை (03), பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 2 தடவையும் இம்மாதம் 1ஆம் திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் சிக்குண்டன. இவ்வாறு மீனவர்களின் வலையில் தொடர்ந்து ஆயுதங்கள் சிக்குவதால், கடற்படையின் மேற்கொண்ட தேடுதலின் போது, ரி-56 துப்பாக்கி, கைக்குண்டுகள் 2…

Read More

மு.கா.வின் மூத்தபோராளிகள் பலர் அ.இ.ம.கா.வில் இணைவு

கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷாத்அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார். கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…

Read More