Headlines

பட்டிப்பளை பிரதேச  பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் அண்மையில் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் ,பனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயன், பிரதி அமைச்சரின்…

Read More

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

Read More

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

அண்மையில், ECGO அமைப்பினால் Technological Course முடிந்த மாண மாணவிகளுக்கு Certificate Awarding Ceremony நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் MM.நெளபர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் MLA.ஜுனைட், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் MAM. ஹலீம் இஷ்ஹாக், MBT ஹான் ஆசிரியர் ஆலோசகர் IT, ஆசிரியர் MM. நவாஸ் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து…

Read More

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார். பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் தென் இந்தியாவின் காயல் மாநகரம் அருகே அமைந்திருக்கும் அதிராம் பட்டிணத்தில் பிறந்தாலும் அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை காத்தான்குடியில் கழித்துள்ளார். காத்தான்குடி மண்ணில் பல்துறை சார் அறிஞர்களை உருவாக்குவதில் முன்மாதிரி மிக்க பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார்.. பிறந்த மண், குடும்பம், உறவுகள் அனைத்தையும் துறந்து…

Read More

வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கிழக்கு பாடசாலைகளுக்கு இடம்மாற்ற நடவடிக்கை!

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளகிழக்கு மாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கானஆசிரியர் நியமனத்தின்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

Read More

அம்பாறையில் வரட்சி: வற்றிய குளங்களிலிருந்து வெளிவரும் முதலைகள்!

அம்­பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்­ப­மான கால நி­லை­யினால்  நீர்த் ­தட்­டுப்­பாடு நில­வு­கி­றது.   கடந்த இரண்டு மாத ­கா­ல­மாக மழை­வீழ்ச்சி கிடைக்­காதன் கார­ண­மாக மலைப்­ பி­ர­தேச காடுகள் வரண்டு காணப்­ப­டு­வ­தினால் வன ஜீவரா­சிகள் நீர் உணவு தேடி மக்கள் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் அலைந்து திரி­கின்­றன. நீர்­நி­லைகள் வற்­றி­யதால் முத­லை­களும் வெளியே வந்துள்ளன.

Read More

ஏறாவூரில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய கணவனின் உள்ளக் குமுறல்

ஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே! இதன்பின்னர் கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது முகநூலில் பதிவிட்ட அவரது உள்ளக் குமுறல்கள் எமது வாசகர்களுக்காக … ஆறு மாத குழந்தையில் தந்தையை இழந்து தந்தையின் அரவனைப்புக்காய் ஏங்கியவள். பின் சகோதர பாசம் காத்துநின்றவள் எதுவும் கிட்டாது பெருமூச்சி விட்டவள்.. தாய் என்ற பாசத்தை மட்டுமே உணர்ந்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டவள். பாசத்துக்காய் ஏங்கிநின்றவள் என் தேவதை….

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஏறாவூர் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணின், கணவரது சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதவிர தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுத்…

Read More

வடகிழக்கு இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை – அமைச்சர் சரத் அமு­னு­கம

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு இலங்­கையர் என்ற பொது­வான அடை­யா­ளத்­துடன் வாழ வேண்டும் என விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்ற, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரா­ளு­மன்ற உரை உள்­ள­டங்­கிய ‘முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை…

Read More

திருகோணமலையில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை

உருளு பூங்கா மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமரங்கிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பரவிய இந்த காட்டுத் தீயில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி தீயால் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்காட்டுத் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More