ACMC News
சாய்ந்தமருதில் அ.இ.ம.கா வின் கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரம்
– எம்.வை.அமீர் – சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாதர்களுக்கும் இளைஞர்களுக்குமான கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அண்மையில் சாய்ந்தமருதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் கிளைகள் அமைக்கப்பட்டு ஏ.எல்.எம் அன்வரை அமைப்பாளராக கொண்டு மத்திய குழுவும் அமைக்கப்பட்டது. ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதிற்கான 17 பிரிவுகளுக்கும்…
புதிய நிர்வாக மாவட்டம்; அ.இ.ம.கா வின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு
* தென்கிழக்குப் பிரதேசத்திற்கென புதிய நிர்வாக மாவட்டம் * வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்ற ஏற்பாடு * ஐக்கிய இலங்கைக்குள் நேர்த்தியான அதிகாரப் பகிர்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அமைப்புத்திட்ட முன் மொழிவில் சுட்டிக்காட்டு. -சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது. தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனங்களையும்…
மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு
– சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொழும்பு மாவட்டத்தில் புத்துயிரூட்ட தான் திட சங்கற்பம் கொண்டுள்ளதாகவும் மக்கள் சேவகன் அமைச்சர் றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த தான் உறுதி பூண்டுள்ளதாகவும் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார். அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், சிரேஷ்ட சட்டத்தரணி என் எம்…
இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது – அமீர் அலி
– வாழைச்சேனை நிருபர் – இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது, இந்தப் பயிற்சியினை பெறும் மாணவர்கள் உயர்ந்த இலக்கினைக்கொண்டு செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும்.என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். நேற்று (10) மாலை மீராவோடை சைபுல்லாஹ் தற்காப்புக் கலைக் கழகத்தின் காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தப்பிரதேசத்தின் ஆண் மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டு போதைவஸ்துப்பாவனைக்கு…
அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்
– சுஐப் எம்.காசிம் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…
அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு
பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…
தீர்க்கமான பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது – றிஷாத் அமைச்சர் றிஷாத்
– சுஐப் எம்.காஸிம் – மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம். மர்ஹூம் அஷ்ரப்…
18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அ.இ.ம.காவுடன் இணைவு
குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா,…
தீவிரவாதத்துக்கு, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று (17) குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
சிராஸ் மீராசாஹிப் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்
– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக…
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிஷாத் மீண்டும் நியமனம்
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால்…
பிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் றிஷாத் அனுதாபம்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உலக நாடுகள் மத்தியில் அமைதிமிக்க நாடாக வர்ணிக்கப்படும் பிரான்ஸில் நேற்று வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது. பரிஸ் தலைநகரத்தை…
