ACMC News
திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்துக் கலந்துரையாடினார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
‘நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது’ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடலில் ஜவாத் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையில் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே, நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி மேயரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உயர்பீட உறுப்பினருமான கே.ஏ.ஜவாத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும்…
மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!
–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (31) மருதமுனையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போனஸ் ஆசனத்துக்காக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேட்பாளரான பூமுதீன் மலிக்கின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதம அதிதியாக சித்தீக் நதீர் கலந்து சிறப்பித்தார். கலந்துரையாடலுக்கு மத்திய குழுவின் பிரதித்…
மக்கள் காங்கிரஸின் கொள்கை விளக்க ஒன்றுகூடல்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் நிந்தவூர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை வேட்பாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், நிந்தவூர் தியேட்டர் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமா டாக்டர்.பரீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். …
நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிமாணம் – மகளிர் அணி உருவாக்கம்!
-முர்ஷிட் முஹம்மத்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையிலான நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, மகளிருக்கான கூட்டமும், நிந்தவூர் பிரதேச மகளிர் அணித் தலைவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும், நிந்தவூரின் மக்கள் காங்கிரஸின் மக்கள் பணிமனையான அமைச்சர் முஸ்தபா லேண்டில் நேற்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை, மக்கள் காங்கிரஸின் தேசிய…
‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!
–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடந்த வியாழக்கிழமை (28) மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், குடியிருப்பு பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக்…
கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களில் நேற்று (30) மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன. அக்குரணை பிரதேச சபை மற்றும் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், மக்கள்…
செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும்…
‘கல்முனை மாநகர சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி’ சிராஸ் மீராசாஹிப் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன்….
எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. …
பண்டாரவெளி வட்டார வேட்பாளரை ஆதரித்த அரபா நகர் மக்கள்!
-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை, ஆதரிக்கு முகமாக பண்டாரவெளி பிரதேச மக்கள் வாழும் மிள்குடியேற்ற கிராமமான அரபா நகரில் இடம்பெற்ற கூட்டத்தில வேற்பாளர் றஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர். இதேவேளை, இம்முறை தேர்தலில் எமது கிராம மக்கள் ஒருமித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேற்பாளரை வெற்றி பெறச் செய்வது என்றும் அங்கிருந்த ஊர்பிரமுகர்கள் தெரிவித்தனர்….
முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.எம்.பைரூஸை ஆதரித்து அண்மையில் வேப்பங்குளத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இளைஞர்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட வேட்பாளர் பைரூஸ், வேப்பங்குள பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார். இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஊர் முக்கியஸ்தர்கள், இந்த மண்ணின் அபிவிருத்திக்கு உதவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்…
