Headlines

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!





–ஏ.எச்.எம்.பூமுதீன்–

மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (31) மருதமுனையில்  இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போனஸ் ஆசனத்துக்காக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேட்பாளரான பூமுதீன் மலிக்கின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதம அதிதியாக சித்தீக் நதீர் கலந்து சிறப்பித்தார். கலந்துரையாடலுக்கு மத்திய குழுவின் பிரதித் தலைவர் எம்.ஏ.சம்சுல் அமான் தலைமை வகித்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தல் சம்பந்தமாகவும், கட்சி சார்பில் மருதமுனையில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கான வியூகங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுமார் 65 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சித்தீக் நதீர் சிறப்புரையாற்றினார் .

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடையாளம் அன்று அஷ்ரப் என்று ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்த கலந்துகொண்ட இளைஞர்கள், இன்று ரிஷாட் என்றும் அதே தொனியில் கருத்து வெளிப்படுத்தியமை மயிர்கூரச் செய்தது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *