Headlines

மொரவெவ பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டம்,  மொரவெவ பிரதேச சபைத் தேர்தலில், ரொடவெவ வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

ஹக்கீமின் நிலை 2020 இல் என்னவாகப் போகிறது? அமீர் அலி மருதமுனையில் ஆருடம்!

-ஊடகப்பிரிவு- முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் ஜனதிபாதி வேட்பாளருமான  சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி” என்ற (Democratic Party) பெயரில் கட்சி ஒன்றை அமைத்து அரசியல் செய்தபோது, இடைநடுவில் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக மாறினாரோ, அதே பாணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதாக மாக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய…

Read More

‘முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகும்’ டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தேசிய இணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியலில் பெண்களின் பங்களிப்பினை நோக்கும் போது, ஏனைய சமூகத்தைச் சார்ந்த பெண்களுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் பெண்கள் அரசியல் விடயங்களில் குறைந்த…

Read More

மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர் காரியாலயம் திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் மஞ்சந்தொடுவாய் 16 ஆம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் என்.கே.றியாழ் அவர்களை ஆதரித்து அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி கலந்துகொண்டார். இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக்காரியாலயமும் பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.          

Read More

கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேசபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கண்டிமாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில், உடதலவின்ன மடிகே வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான எஸ். எம். இர்ஷாத் மற்றும் சட்டத்தரணி பைசர் ஆகியோரை ஆதரித்து நேற்று (07) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் வேட்பாள ர்களான மாஹிர் ஆசிரியர், ஹனிப் ஹாஜியார்,லரிப், மற்றும் ஜகத் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.  …

Read More

வவுனியா நகரசபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகரசபையின் இரண்டாம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான  முன்னாள் நகர சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான அப்துல் பாரி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் லரீப் ஆகியோரை ஆதரித்து நேற்று (07) பட்டாணிச்சூரில் இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.            

Read More

தாராபுரத்தில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  மன்னார், தாராபுரம் வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எச்.உவைஸ் அவர்களை ஆதரித்து, புத்தளம் அல் காஸிமி சிட்டியில் நேற்று (07) கூட்டமொன்று இடம்பெற்றது. இளைஞர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில், வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன், சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின்  ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்    …

Read More

புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் அலுவலகம் திறப்பு நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிபாஸ் நசீரின் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.        

Read More

வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்.. டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரசபைத் தேர்தலில், ரஹ்மானிய வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸில் போட்டியிடும் வேட்பாளர் மஹ்தியை ஆதரித்த கூட்டம் நேற்று மாலை  (05) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தகது.        …

Read More

சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- வர்த்தக, மீனவ, லொறி, முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் செவிப்புலனற்றோர் அமைப்பு ஆகியவற்றை  ஒன்றிணைத்த கலந்துரையாடலொன்று நேற்று மாலை (05) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளாரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பை, வை.என்.டிரவல்ஸ் உரிமையாளர் ஜனாப் எம்.எஸ்.யாஸ்தீன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் அதிதியாகக் கலந்துகொண்டதோடு, சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும்…

Read More

‘முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென மு.கா துடியாய்த் துடிக்கின்றது’ மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டாரத்துக்கான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜலீலை ஆதரித்து, மாவடிப்பள்ளியில் இன்று (06) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போதே…

Read More

கண்டி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அமோக வரவேற்பு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச சபை மற்றும் உடுநுவர பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்குரணை, உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் நேற்று (05) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அக்குரணை பிரதேச சபைக்குட்பட்ட உக்கல்ல வட்டாரத்தில் போட்டியிடும்…

Read More