ACMC News
நெடுந்தீவு மக்கள் சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பூவரசந்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ராஸிக் பரீட் தலைமையில், நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
‘வாக்காளர் இடாப்பில் இருக்கும் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்தமை வேதனையானது’ டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- வாக்காளர் இடாப்பில் 52 சதவீதமாக இருக்கும் பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகவும் குறைவாக கஞ்சிக்குள் இட்ட பயிராக இருப்பது வேதனையானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாறையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மகளிருக்கான விஷேட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். ஒலுவில், கொலனி 5ஆம் பிரிவு, திராய்க்கேணி, பாலமுனை, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகியவற்றில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்….
கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் சார்பாக புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் தலைமையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் கல்ந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் வன்னியார் வட்டார வேட்பாளர் காரியாலயம் திறப்புவிழா!
-முர்ஷிட் முஹம்மத்- மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் கனவுகளுடன் நாளைய தலைவர்களை உருவாக்கும் பயணத்தில், நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் மயில் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் பொறியியலாளர் ஆதம்பாவா வாக்கிர் ஹுசைனின் தேர்தல் காரியாலய திறப்புவிழா நேற்று முன்தினம் (03) ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி தலைமையில் இடம்பெற்றது. “நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானவர்கள் அல்ல, அதுவே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் தாய்க்கட்சி. ஆனால் அந்தக் கட்சியையும், அதனூடாக நமது சமூகத்தையும் தவறான வழியின்பால்…
மக்கள் காங்கிரஸின் சிலாபத்துறை வேட்பாளரை ஆதரித்த முசலி மக்கள்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முசலி பிரதேச சபை தேர்தலில் சிலாபத்துறை வட்டாரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் முகுசீன் ரயீசுதீனை ஆதரித்து முசலியில் அண்மையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முசலி கிராம முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“வடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!
-அமைச்சரின் ஊடகப்பிரிவு- வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் நேற்று (04) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி தேர்தலை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அது ஒரு முக்கிய தேர்தலாகவே நாம்…
வவுனியா மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (03) இடம்பெற்றது. வவுனியா தம்பா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“சிறுபான்மைச் சமூகத்தின் அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட ஆட்சித் தலைவர்கள் நன்றிகெட்டதனமாக நடக்கக் கூடாது” திருமலையில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (01) திருமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மறுப்பு!
-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி கூறப்படும் கதைகள், அப்பட்டமான பொய்யெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில்…
பிரதியமைச்சர் பைசல் காஸிமின் செயலாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பைசல் காசிமின் செயலாளர் அன்வர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01 ) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே செயலாளர் அன்வர்தீன் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
‘தனி மரங்கள் தோப்பாகாத நிலையிலேதான், தோப்புக்கள் மூலம் சமூகத்துக்கான விடிவைப் பெற முயற்சிக்கின்றோம்’ ஹனீபா மதனி தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே போராடி வருகின்றன எனவும், தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி…
தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- தம்பலாகமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.அலீபுல்லாஹ்வின் இல்லத்தில் நேற்று முன்தினம் (31) இடம்பெற்றது. மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் மற்றும் வெற்றிக்கான நகர்வுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
