Headlines

கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களில் நேற்று (30) மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அக்குரணை பிரதேச சபை மற்றும் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உருப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *