ACMC News
Clean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு!
புத்தளம் மாவட்டத்தின் சூழல் பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டுவரும் Clean Puttalam அமைப்பினர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் தலைமையில், அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தவிசாளர் அமீர் அலி ஆகியோரை சந்தித்து, தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு நேற்று (02) ஒன்று கூடியது. மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத், மாவட்ட செயற்குழுவின் தலைவர் அன்ஸில், மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளரும் மாவட்ட செயற்குழு செயலாளருமான ஜுனைடீன் மான்குட்டி மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலின் போது, சாய்ந்தமருது பிரதேச 17 குறிச்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, சாய்ந்தமருது மத்தியகுழுவை உடனடியாக அமைப்பது சம்பந்தமாகவும்,…
“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று காலை (01) ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “ஒரு சம்பவத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால்தான்…
வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு!
வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (௦1) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், திலீபன், மாகாண ஆளுனர்களான திருமதி சார்ள்ஸ், மஹிபால ஹேரத், அநுராதா யகம்பத் மற்றும் அமைச்சின் செயலாளரான கமல் குணரட்ன உட்பட…
மாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
அரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம். நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் இன்று (30.9.2020) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் தாஹீர் உரையாற்றுகையில், மாடு அறுப்பதற்கு அரசாங்கம் தடையை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பசு வதைக்கு எதிராகவே இத்தடையை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இத்தடை முயற்சியின் பின்னணியில்…
நிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை!
நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இதன் போது, வடிகான்களை துப்புரவு செய்வது பற்றியும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. டெங்குவை…
மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்!
மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் தலைமையில், கொழும்பு 15, மட்டக்குளிய, பொகுணுவத்த பிரதேசத்தில் இன்று (26) நடைபெற்ற ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முகாமிற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வருகை தந்ததுடன், சிகிச்சை பெற வருகை தந்தவர்களுடனும் கலந்துரையாடினார்.
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு!
புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் பா.உ ரிஷாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,…
‘புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குப் பதிவை நிராகரிக்க முடியாது’ – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அலி சப்ரி எம்.பி காட்டம்!
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட பொதுஜன ஜக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல் மாயாதுன்ன முன்வைத்த யோசனைக்கு எதிராக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது எதிர்ப்பை வெளியிட்டார். புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முதலாவது கூட்டம், இன்று (18) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே, இந்த யோசனைக்கு அவர் தனது பலத்த எதிர்ப்பை வெளியிட்டார். அபிவிருத்திக்…
இடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்!
இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு…
செங்காமம் பாடசாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்..!
பொத்துவில், செங்காமம், அல்மினா மகா வித்தியாலயத்தின் பௌதிக வளங்களுக்கு காட்டு யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்பு மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக, பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஸாஜகான், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு, நேற்று (16) பாடசாலைக்கு உடனடியாக களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அடுத்த நாளே யானை தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். அதற்கமைய, தடுப்பு வேலி அமைக்கும் பணி, இன்று (17) காலை…
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்-கனடா உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னின் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (14) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
